என் வாழ்க்கையின் அழகான! மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜீவன் மெண்டீஸ் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 636 ரன்கள் எடுத்துள்ளவர் ஜீவன் மெண்டீஸ்.
இவர் 22 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.
அதே போல 161 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி 7769 ரன்களை குவித்துள்ளார் மெண்டீஸ்.
ஜீவன் மெண்டீஸ் மனைவியின் பெயர் வனிஷா மெண்டீஸ் ஆகும். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையடுத்து ஜீவன் மெண்டீஸ் டுவிட்டரில், என் வாழ்க்கையின் அழகான, சிறந்த என் காதலுக்குரிய மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Happy Birthday to the prettiest, the best, the one and only love of my life, my wife... ❤️ pic.twitter.com/cclDj5iiqT
— Jeevan Mendis (@jeevanmendis) January 31, 2021