உலகின் பாரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்! முதலிடத்தை பிடித்தது யார் தெரியுமா?
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை இழந்தார்.
எலான் மஸ்க்
SpaceX, டெஸ்லா என பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
அவர் 9 மாதங்களுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அவர் முதலிடத்தை இழந்துள்ளார்.
அமேசானின் பங்குகள் 2022யில் இருந்து ஏறக்குறைய இரு மடங்கு அதிகரித்தன. அதே சமயம் டெஸ்லாவின் பங்கு 2021யில் இருந்து 50 சதவீத அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது.
பெசோஸ் முதலிடம்
அத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
இதன்மூலம் எலான் மஸ்க்கினை பின்னுக்குத் தள்ளி பெசோஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் பெசோஸ் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, மஸ்க் மற்றும் பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |