உலகின் பெரும் பணக்காரர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லையாம்!!
உலகம் பெரிய பணக்காரர்களில் ஒருவரானான Jeff Bezos ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்டவில்லை என்று சொல்ல நம்ப முடிகின்றதா? அதுபோல அமெரிக்காவின் இரண்டாவது பணக்காரர் Elon Musk 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தவில்லை என்று கூறினால் இதை நம்ப முடிகின்றதா? ஆம் இது உண்மை.
நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் propublica என்ற புலன்னாய்வு பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின் படி, 25 பெரிய பணக்காரர்கள் வரி தவிர்ப்பு செய்துள்ளனர்.
IRS எனப்படும் அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையின் புள்ளிவிபரங்கள் மற்றும் propublica பத்திரிக்கை வெயிட்ட புள்ளி விபரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த ஆய்வு அறிக்கையின் படி, 2007 முதல் 2011 வரை அமேசன் நிறுவனர் Jeff Bezos கூட்டாண்மை வருமான வரி செலுத்தவில்லை. ஆனால் அந்த வருடம் amazon நிறுவனத்தின் பங்குகள் 2 மடங்காக உயர்ந்தது. அதேபோல் Elon Musk 2018 ஆம் ஆண்டு கூட்டாண்மை வருமான வரி செலுத்தவில்லை.
சாதாரண அமெரிக்க குடிமகன் உச்சபட்டச வருமான வரி தசவீதம் 37%. மேலும் 70 000 டொலருக்க சம்பாதித்தால் கூட்டாண்மை வருமான வரி மட்டுமே சமீப காலத்தில் 14%. செலுத்த வேண்டும்.
ஆனால் Warren Buffett,Jeff Bezos Michael Bloomberg,Elon Musk போன்ற உலக பணக்காரர்கள் செலுத்திய மொத்த வருமான வரி சராசரியாக 3.4 % மட்டுமே. அதிலும் Warren Buffett சமீபத்தில் 3 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை.
2014 முதல் 2018 இவர் செலுத்திய மொத்த வருமான வரி 0.1 %ஆகும். propublica வெளியட்ட புலன்னாய்வு அறிக்கையின் படி இந்த 25 பணக்காரர்கள் 2018 ஆம் ஆண்டு இறுதியில் இவர்களின் மதிப்பு 1.1 ட்ரில்லியன். அதாவது ஒரே சொத்து மதிப்பை வைத்திருக்கும் ஒரே அளவு கூலி வாங்கும் 14.3 மில்லியன் அமெரிக்க குடிமகன்களை இணைத்தால் வரும் மதிப்பு. அப்படிருக்க இவர்கள் கட்டிய மொத்த வருமான வரி 1.9 மில்லியன் டொலர்கள்.
ஆனால் சம்பளம் வாங்குபவர்கள் 143 பில்லியன் டொலர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனர். இதில் கொடுமை என்னவொன்றால் 25 பணக்காரர்கள் செய்தது வரி ஏய்ப்பு கிடையாது வரி தவிர்ப்பு. அதாவது சட்டப்பூர்வமானது.
உலகில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுவது அமொரிக்கா. குறிப்பாக அமெரிக்காவில் வரி வசூலிக்கப்படும் முறை அனைவரும் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ற அளவில் வரி செலுத்த வேண்டும்.
அதாவது அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் அதிக வரியும் குறைத்த சம்பவளம் வாங்குபவர்கள் குறைந்த வரியும் செலுத்த வேண்டும் என்பதை மையப்படுத்தியே இருக்கும்.
ஆனால் இந்த புலன்னாய்வு அறிக்கை அனைத்தையும் தவிடுபோடியாக்குகிறது. இந்த அறிக்கை இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது முக்கிய காரணம் joe bidenனின் புதிய வரி திட்டம்.
இந்த புதிய வரிதிட்டத்தை அவர் சமீபத்தில் முன்மொழிந்தார். அதன்படி அமொரிக்கர்களின் அதிகபட்ச வருமான வரி 37 % இருந்து 39.6 % மாக மாற்றப்படுகின்றது. இந்த வரிமுறையை வெளியிட்ட சில நாட்களில் propublica இந்த அறிக்கை வெளியாக்கியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் G7 மாநாட்டில் பொருளாதாரம் வளந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்தது. corporate வரிசூலிக்கலாம் என ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் அமொரிக்காவும் ஒன்றாகும்.
இந்த செய்தி வெளிவந்த சிலநாட்களில் propublica இந்த ஆய்வு தகவல் வெளிவந்தது உலக பொருளாதாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து propublica வெளியிட்ட ஒரு குறிப்பில் அமொரிக்க பணக்காரர் வரி ஏய்ப்பு செய்யமால் சட்டப்பூர்வமாக வரி தவிர்ப்பில் ஈடுபடுகின்றனர்.
அதாவது தங்களுடைய பணத்தில் சொத்தாக வாங்கி அந்த சொத்துகளை விற்கமால் வங்கியில் அதை வைத்து கடன் வாங்கி வசதியாக வாழ்ந்து பணம் சேர்த்து பின்னர் இறந்துவிடுவதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல அவர்களின் சந்ததியினரும் செல்வந்தராக வாழ்கின்றனர்.
உதாரணமாக 10 மில்லியன் டொலர் கடன் வாங்கினால் 3% வரி மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் 10 மில்லியன் டொலர் சம்பளம் வாங்கினால் 37 % வரி செலுத்த வேண்டும்.
இதன்பிறகு இறந்தவுடன் சேவை நிறுவனத்தையும் தொண்டு நிறுவனத்தையும் எஸ்டேட் வரியில் இருந்து தப்பிக்க பயன்படுத்தி கொள்வார்கள். பெரும்பாலும் அனைத்து நாட்டில் உள்ள பணக்காரர்கள் இந்த முறையிலலே பொருளை ஈட்டுவார்கள்.
சொத்துக்களை அதிகம் வாங்கி அதை வைத்து கடன் வாங்குவதனால் மட்டுமே பெரும்பாலும் அவர்கள் அதில் நட்டம் ஏற்பட்டு திவாலானானும் அவர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை.
இந்த அமைப்பில் வாழ்வதன் மூலம் அமொரிக்காவில் அவர்களால் எளிதாக சட்டப்பூர்வமாக வரியை தவரிக்க முடிகின்றது. propublicaவின் இந்த அறிக்கை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியபோது உலக பணக்காரர்களின் தரவரிசையில் இருக்கும் அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் வரி விபரங்கள் குறித்து வெளியிடுவது மிகவும் தவறானது என கூறியுள்ளனர்.
இதுகுறித்து The Guardian பத்திரிக்கை அமெரிக்கா முதல் தொழிலதிபர் செயலாளர் robert reich எழுதிய செய்தியில் அமொரிக்க தற்போது 2 மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது.
ஒன்று வெள்ளையின மக்களின் ஆதிக்கம், அதன் மூலமாக ஜனநாயத்தின் வாக்கு உரிமையை அடக்க நினைக்கிறார் ட்ரம்ப் மற்றும் அவரின் ஆதாரவளார்கள்.
அடுத்ததாக செல்வந்தர்களின் ஆதிக்கம், இவர்கள் அரசியல்வாதிகள், நீதித்துறையை விலைக்கு வாங்குகின்றார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளை எதிர்த்து மக்கள் குறல் கொடுக்க வேண்டிய நேரம் இது என எழுதியிருந்தார்.
உலக நாடுகள் பலவற்றில் இந்த பிரச்சினை இருந்து வருகின்ற போதும் அமொரிக்கா மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப மிகப்பெரிய காரணம் அதன் பொருளாதார வளர்ச்சியே ஆகும்.
அதற்கு பெரும்பாலான மக்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடமால் வரி பணம் அரசிடம் செல்வதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால் இந்த அறிக்கை மக்களின் உரிமையையும் அங்கு கடைப்பிடிக்கப்டும் ஜனநாயகத்தையும் கேள்வி கேட்ப்பதற்கான ஆரம்ப புள்ளியாக அமைந்துள்ளது.