முகேஷ் அம்பானியை அடுத்து... இந்த திட்டத்தில் ரூ 68,000 கோடி முதலீடு செய்யும் ஜெஃப் பெசோஸ்
மகாராஷ்டிராவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ 3.05 லட்சம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக ஒப்பந்தம் முன்னெடுத்துள்ளது.
முழுநேர வேலை வாய்ப்பு
தற்போது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனமும் மகாராஷ்டிராவில் 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் ரூ 68,000 கோடி தொகையை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் இந்த முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தும். அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 பில்லியன் டொலர் தொகையைச் சேர்த்து, பத்தாண்டுக்குள் தோராயமாக 81,300 முழுநேர வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இந்த நகர்வானது டேட்டா சென்டர்களுக்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கான மகாராஷ்டிராவின் இலக்கை முன்னெடுத்துச் செல்லும். தரவு மையங்களின் உலகத் தலைநகராக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறி வருவதாக,
பொருளாதார வளர்ச்சி
இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மாகாண முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அமேசான் நிறுவனத்துடனான இந்த ஒத்துழைப்பு நமது மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார்.
மேலும், தரவு மையங்களுக்கு சாதகமான சூழலை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |