பிரான்சில் ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி பாதிப்பு
பிரான்சிலுள்ள அணு மின் நிலையங்களை குளிர்விக்க பயன்படும் தண்ணீரில் ஜெல்லி மீன்கள் இருந்ததால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சிலுள்ள அணு மின் நிலையம் ஒன்றில் உள்ள அணுக்கரு உலைகள் மூன்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின் வழங்கல் அமைப்பான EDF (Électricité de France) தெரிவித்துள்ளது.
ஜெல்லி மீன்களால் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி
பிரான்சிலுள்ள Dunkirk என்னுமிடத்திற்கு அருகில், மேற்கு ஐரோப்பாவிலேயே பெரிய அணு மின் நிலையமான Gravelines அணு மின் நிலையம் அமைந்துள்ளது.

இந்த மின் நிலையங்களிலுள்ள அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த குழாய்கள் வழியாக கடல் நீர் செலுத்தப்படும். விடயம் என்னவென்றால், பருவநிலை மாற்றம், அதிக அளவில் மீன்களைப் பிடித்தல், வெப்பமாகும் கடல், பிளாஸ்டிக் மாசு ஆகிய காரணங்களால் கடலில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் பெருகுகின்றன.
மின் நிலையங்களிலுள்ள அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக இந்த கடல் நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், Gravelines அணு மின் நிலையத்தில் அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் கடல் நீரில் ஏராளமான ஜெல்லி மீன்கள் இருந்ததால், குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அணு மின் நிலையத்திலுள்ள மூன்று அணுக்கரு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின் வழங்கல் அமைப்பான EDF தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அதீத வெப்பம் காரணமாக பிரான்சில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணுக்கரு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |