அமீரக அணியை புரட்டியெடுத்த இந்திய அணி! 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி
ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை 75 ஓட்டங்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிகஸ் பெற்றார்
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்
மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தை 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
சில்ஹெட்டில் நடந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், தீப்தி சர்மா மற்றும் ஜெமிமா இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
அணியின் ஸ்கோர் 148 ஆக இருந்தபோது தீப்தி சர்மா ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார்.
ICC
இறுதிவரை களத்தில் நின்ற ஜெமிமா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமீரக அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.