ஸ்ம்ரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கிளீன்போல்டு..அரைசதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிகஸ்
அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் அரைசதம் அடித்தார்.
ஸ்ம்ரிதி மந்தனா சொதப்பல்
பெர்த்தின் W.A.C.A மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
தொடக்க வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 13 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லூசி பந்துவீச்சில் போல்டானார்.
அடுத்து ஷஃபாலி வெர்மா 6 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களும், பிரதிகா ராவல் 18 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜெமிமா அரைசதம்
பின்னர் வந்த ஹர்மன்பிரீத் (19), தீப்தி ஷர்மா (7), ரிச்சா கோஷ் (11) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) நிலைத்து நின்று ஆடி அரைசதம் விளாசினார்.

தான் விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ஜெமிமா ரோட்ரிகஸ் அரைசதம் அடித்துள்ளார். அணியின் ஸ்கோர் 150 ஆக உயர்ந்தபோது, ஜெமிமா 52 ஓட்டங்கள் (7 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |