ரசிகர்கள் பக்கம் கவனத்தை கொண்டு செல்லாதீர்கள்: விராட் கோலி அறிவுரை!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் சந்தித்து பேச சிலநிமிட நேரங்களே கேட்ட எங்களுக்கு நான்கு மணிநேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் சந்தித்தது குறித்து தற்போது பேசியுள்ளார்.
அதில் நியூசிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடருக்காக சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு ஹோட்டலில் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தங்கி இருப்பதை கேள்விபட்டோம்.
அதனை தொடர்ந்து, அவரை சந்தித்து பேட்டிங் நுணுக்கங்கள் குறித்த ஆலோசனையை பெறுவதற்காக ஒரு நான்கு நிமிட நேரம் ஒதுக்கும்மாறு நானும், ஸ்மிருதி மந்தனா கேட்டிருந்தோம்.
இந்த நிலையில், சிலநிமிடங்கள் மட்டுமே அனுமதி கேட்டிருந்த எங்களுக்கு நான்கு மணிநேரம் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து.
அப்போது விராட் கோலி அவர்களிடம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படி கையாள்வது என நான் கேட்டதற்கு, என்னுடைய ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் ஸ்கோர் போர்டில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.
நீங்களும் அதையே செய்யுங்கள், ரசிகர் பக்கம் என்றும் உங்கள் கவனத்தை கொண்டு செல்லாதீர்கள், அணியின் வெற்றியை எப்படி முன்னகர்த்தி செல்வது என்பதை திட்டமிடுங்கள் என கோலி அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.