இலங்கை முத்தரப்பு தொடரில் 123 ரன் விளாசிய வீராங்கனை! தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு
மகளிர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஸ்மிருதி மந்தனா அரைசதம்
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றையப் போட்டியில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் பிரதிகா (1), ஹர்லீன் தியோல் (4) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 28 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது.
அரைசதம் அடித்த ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 63 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியில் மிரட்ட, தீப்தி ஷர்மா தனது பங்குக்கு தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ஜெமிமா ரோட்ரிகஸ் சதம்
இதனைக் கூட்டணி 122 ஓட்டங்கள் குவித்தது. இரண்டாவது ஒருநாள் சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemiah Rodrigues) 101 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 123 ஓட்டங்கள் குவித்தார்.
சரவெடி ஆட்டம் ஆடிய தீப்தி ஷர்மா (Deepti Sharma) 84 பந்துகளில் (2 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) 93 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 337 ஓட்டங்கள் குவித்தது.
கிளாஸ், நடினே டி கிளெர்க், லாபா தலா 2 விக்கெட்டுகளும், அன்னெரி டெர்க்சென் மற்றும் க்ளோ ட்ரியோன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |