உலகக் கோப்பையுடன் உறங்கும் ஜென்னி ஹெர்மோசோ
ஸ்பெயின் அணி வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோ உலகக்கோப்பையுடன் படுத்துறங்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ஸ்பெயின் அணி.
இந்த தொடரில் இதுவரை தோல்வியை தழுவாத இங்கிலாந்து அணி வெற்றி பெறும் முனைப்போடு விளையாடியது.
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்தை பழிதீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்பெயின் அணி விளையாடியது.
போட்டி தொடங்கிய 29வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்தது, இறுதிவரை போராடியும் இங்கிலாந்து அணியால் கோல் போட முடியவில்லை, கடைசியில் 1-0 என்ற கணக்கில் உலகக்கோப்பையை வென்றது ஸ்பெயின்.
இக்கோப்பையின் அணி வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோ படுத்து உறங்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |