என்விடியா-விற்கு மீண்டும் திரும்பினால் பெருமை கொள்வேன்: மனம் திறந்த ஜென்சன் ஹுவாங்
Jensen huang signals interest in returning to Nvidia: என்விடியா நிறுவனத்தின் நிர்வாக குழு வாரியம் முடிவு செய்தால் மீண்டும் பணிக்கு திரும்புவதில் ஆர்வமாக இருப்பதாக ஜென்சன் ஹுவாங் வெளிப்படுத்தியுள்ளார்.
என்விடியா-விற்கு மீண்டும் திரும்புவாரா ஜென்சன் ஹுவாங்
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் CEO ஜென்சன் ஹுவாங்(Jensen Huang)சீன பெண் உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹவாங்(Alice Huang) என்பவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததை ஒப்புக் கொண்டதோடு தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து ஜென்சன் ஹுவாங் வெளியிட்ட பொது அறிக்கையில், என்விடியா நிறுவனம், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவின் நலனிற்கு சிறந்தது என்று வாரியம் முடிவு செய்தால் மீண்டும் என்விடியா நிறுவனத்திற்கு திரும்புவதில் பெருமை கொள்வேன் என்று ஹுவாங் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை ஒப்புக் கொண்ட போதிலும், தன்னுடைய சமூக ஊடக பதிவிற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து இருப்பதாகவும் ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வு குறித்து என்விடியா நிறுவனம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.