எந்தவித பாதிப்பும் ஏற்படாது...பிரான்ஸ் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய ஜெர்சி தீவு! நாட்டு மக்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு
மீன்பிடி பிரச்சினை காரணமாக ஜெர்சி தீவிற்கான மின்சார விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அத்தீவின் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சமீபத்தில் இங்கிலீஷ் சேனலில் இருக்கும் ஜெர்சி தீவில் பிரான்ஸ் மீனவர்கள் மீன் பிடிக்க தீவின் அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ் அரசாங்கம், ஜெர்சி தீவுக்கு பிரான்சிலிருந்து கடலுக்கு அடியில் கேபில் மூலம் விநியோகிக்கப்படும் மின்சாரத்தை துண்ப்போம் என எச்சரிக்கை விடுத்தது.
பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய மீன் பிடி பிரச்சினை காரணமாக ஜெர்சி தீவுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை துண்டிப்பதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரித்தானியா கூறியது.
Following enquiries from our customers regarding the French fishing dispute, JE can reassure customers that in the unlikely event electricity supplies from France are disrupted, La Collette Power Station and Queens’ Road has capacity to supply Jersey’s electricity requirements pic.twitter.com/2W0WR3lGTf
— Jersey Electricity plc (@electricjersey) May 5, 2021
இந்நிலையில், ஜெர்சி தீவு அராங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியில் இருந்து வரும் மின் விநியோகம் தடைப்பட்டால், நமது மின் தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் நிலையங்களால் முடியும், ஜெர்சி தீவின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு பாதிக்கப்படாது என உறுதியளித்துள்ளது.