மருத்துவமனையில் 18 மணி நேரம் காத்திருப்பு... தந்தை தொடர்பில் அச்சத்துடன் கண் கலங்கிய பிரித்தானிய எம்.பி

London
By Arbin Nov 11, 2022 10:19 AM GMT
Report

பிரித்தானிய எம்.பி ஒருவர் தமது தந்தை சிகிசைக்கு அனுமதிக்கும் முன்னர் 18 மணி நேரம் மருத்துவமனையில் காத்திருக்க நேர்ந்ததாக அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

குறித்த காத்திருக்கும் நேரத்தில் அவர் மரணமடைந்துவிடுவாரோ என தாம் அஞ்சியதாகவும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.

நோயாளி ஒருவர் 12 மணி நேரம் காத்திருப்பு 

கடந்த அக்டோபர் மாதம் சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்னர் நோயாளி ஒருவர் குறைந்தது 12 மணி நேரம் வரையில் மருத்துவமனையில் காத்திருக்க நேர்ந்ததாகவும், இந்த எண்ணிக்கை 43,792 எனவும் NHS இங்கிலாந்து வெளிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் 18 மணி நேரம் காத்திருப்பு... தந்தை தொடர்பில் அச்சத்துடன் கண் கலங்கிய பிரித்தானிய எம்.பி | Jess Phillips Feared Her Dad Would Die

@PA

மேலும், செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கையானது 32,776 என பதிவாகியிருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதுவே உச்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, லண்டனில் இருந்து அவசர அவசரமாக திரும்பிய ஜெஸ் பிலிப்ஸ் எம்.பி தமது 78 வயதான நோயாளியான தந்தையை கவனிக்க சென்றுள்ளார். புதன்கிழமை பகல் 10 மணிக்கு 111 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, காத்திருந்த அவருக்கு, அவசர மருத்துவ உதவிக்குழுவினரை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் 7 மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் சேவையை அனுப்பி வைக்கவில்லை என்றும், பதறிப்போன நாடாளுமன்ற உறுப்பினர், தமது வாகனத்திலேயே தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை

NHS இங்கிலாந்து அமைப்பு மொத்தமாக சிதைந்து போயுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெஸ் பிலிப்ஸ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். மதியத்திற்கு மேல் சுமார் 7.30 மணிக்கு குயின் எலிசபெத் மருத்துவமனையில் சென்று சேர்ந்த பின்னர் அவருக்கு கடுமையான தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால், வியாழக்கிழமை 3 மணியளவில் அவரை முதியோர்களுக்கான காத்திருக்கும் அறைக்கு ஒரு இருக்கையுடன் அனுப்பி வைத்துள்ளனர். உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸிடம் பகல் 9 மணிக்கு திரும்ப வாருங்கள் எனவும் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் 18 மணி நேரம் காத்திருப்பு... தந்தை தொடர்பில் அச்சத்துடன் கண் கலங்கிய பிரித்தானிய எம்.பி | Jess Phillips Feared Her Dad Would Die

Pic: Steven May

தொடர்ந்து 18 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர், மருத்துவமனைக்குள் அனுமதிக்க முடியாத சூழலை எடுத்துக் கூறிய மருத்துவர்கள், குடியிருப்பில் வைத்தே கண்காணிக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பல கட்டத்தில் கண்ணீர்

இப்படியான ஒரு சூழலை தாம் இதுவரை எதிர்கொண்டதில்லை என தெரிவித்துள்ள தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ், பல கட்டத்தில் கண்ணீரை தம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றார்.

நல்ல வேளையாக இரவுப்பணியில் இருந்த ஊழியர்கள் தமது தந்தையை நன்றாக கவனித்துக் கொண்டார்கள், அதனால் பாதிப்பில்லாமல் வீடு திரும்ப முடிந்தது என்றார் ஜெஸ் பிலிப்ஸ்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US