இந்த வாழ்க்கையை விட சிறையில் உயிரிழப்பது சிறந்தது! ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நீதிமன்றத்தில் கண்ணீர்
வாழ்க்கை மீதான நம்பிக்கை இல்லை, சிறையிலேயே உயிர் விடுவது சிறந்தது என கண்ணீர் மல்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்
இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனரான நரேஷ் கோயல் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நரேஷ் கோயல் கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆர்தர் ரோடு சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கும் நரேஷ் கோயல் சனிக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
கண்ணீர் மல்க பேசிய நரேஷ் கோயல்
கைகளை கட்டியவாறு கண்ணீருடனும் நீதிமன்றத்தில் நின்ற நரேஷ் கோயல்(Naresh Goyal) சிறப்பு நீதிபதி எம் ஜி தேஸ்பாண்டேவிடம் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டு முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இது தொடர்பான விசாரணையின் சில நிமிட தனிப்பட்ட விசாரணை வேண்டும் என கோயல் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் போது, தன்னுடைய மனை அனிதாவுக்கு தீவிர புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், தன்னுடைய ஒரே மகளும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கைகளும் போய்விட்டது, தற்போது இருக்கும் நிலைமையில் வாழ்வதை விட சிறையில் உயிரிழப்பது சிறந்தது என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Jet Airways founder Naresh Goyal, Naresh Goyal, Jet Airways, The Enforcement Directorate, ED, Canara Bank, judicial custody, businessman, Money, cash fraud, money fraud, bail,