ஜேர்மன் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 113 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஆபரணங்கள்: தற்போதைய செய்தி
ஜேர்மனியின் பிரபலமான அருங்காட்சியகத்தில் 113 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஐந்துபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
எதை திருடுகிறோம் என்பதே தெரியாமல் திருடிய கூட்டம்
2019ஆம் ஆண்டு, ஜேர்மனியின் Dresden நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
REUTERS
அவற்றின் மதிப்பு சுமார் 113 மில்லியன் யூரோக்கள் ஆகும். ஆனால், விடயம் என்னவென்றால், அவை விலை மதிப்பில்லாதவை என்பது ஒரு பக்கமிருக்க, அவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொக்கிஷங்களாகும்.
GETTY IMAGES
முன்கூட்டியே நன்றாக திட்டமிட்டு, முன்னரே அருங்காட்சியக இரும்பு ஜன்னல் ஒன்றை இயந்திரத்தின் உதவியால் வெட்டி, வெட்டியது தெரியாததுபோல ஒட்டிவைத்துவிட்டு, பின்னர் அந்த பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து அந்த ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர் கொள்ளையர்கள்.
Five men convicted of stealing €113m worth of jewels, including diamond encrusted sword, from German museum https://t.co/MK0HLwdTW8
— BBC Breaking News (@BBCBreaking) May 16, 2023
சமீபத்திய தகவல்
அந்த கொள்ளையர்களில் சிலர் பொலிசாரிடம் சிக்கிய நிலையில், அவர்களில் மூன்று பேர், தங்களுக்கு தண்டனையைக் குறைப்பதாக இருந்தால், கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்கள் எங்கே உள்ளன என்பதைக் கூற முன்வந்தார்கள். அதன்படி, கொள்ளையடிக்கபட்ட ஆபரணங்களில் பல திரும்பக் கிடைத்துவிட்டன.
REUTERS
ஆனாலும், அபூர்வ வைரம் ஒன்று உட்பட சில நகைகள் கிடைக்கவில்லை, அவை கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஐந்துபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அவர்களுக்கு நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.