லண்டனில் யூத இளைஞர் மீது இனவெறி தாக்குதல்! நடந்தது என்ன? வெளியான முக்கிய புகைப்படம்
லண்டன் இரயில் நிலையத்தின் வாசலில் யூத இளைஞர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
West Hampstead Overground station வாசலில் தான் இச்சம்பவம் கடந்த 2ஆம் திகதி நடந்துள்ளது.
அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் 20களில் உள்ள யூத இளைஞரிடம் வந்த நபர் அவரை நோக்கி யூத விரோத கருத்துக்களை கூறியுள்ளனர்.
இதன்பின்னர் யூத இளைஞரை தாக்கிவிட்டு தன்னிடம் கத்தி இருப்பதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்றிருக்கிறார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் இந்த தாக்குதல் குறித்து பேச விரும்புவதாக பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.