நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியில் பரவிய எதிர்ப்பு... யூத இளைஞர்களை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள்
ஜேர்மனியின் பெர்லின் நகரில் யூத இளையோர் கால்பந்து அணி மீது பாலஸ்தீன ஆதரவு குழு ஒன்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் முன்னெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபு மற்றும் துருக்கிய மக்கள்
இந்த விவகாரம் தொடர்பில் Makkabi Berlin அணியின் இளையோர் அணி தெரிவிக்கையில், உள்ளூர் எதிரணியினருக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு அரபு இளைஞர்களால் தாங்கள் வேட்டையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இளையோர் கால்பந்து அணியில் 13 முதல் 16 வயதுடையோர் செயல்பட்டு வருகின்றனர். பெருவாரியான அரபு மற்றும் துருக்கிய மக்கள் வசித்துவரும் Neukölln பகுதியிலேயே கால்பந்து போட்டி நடந்துள்ளது.
ஆட்டத்தின் போது யூத இளையோர் அணியினர் கடுமையாக கேலிக்கும் கிண்டலுக்கும் இரையாகியுள்ளனர். அரபு இளைஞர்களால் வேட்டையாடப்பட்டதாகவும், பாலஸ்தீன விடுதலை வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டுள்ளதாகவும் யூத விளையாட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம்
Makkabi Berlin அணியானது 1970களில் ஹோலோகாஸ்டில் இருந்து உயிர் பிழைத்தவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பெர்லினில் உருவாகும் முதல் யூத விளையாட்டு அணி இதுவாகும்.
இந்த மாத தொடக்கத்தில் Makkabi Berlin அணியின் ரசிகர் ஒருவர் அந்த அணியின் கழுத்துத் துண்டு அணிந்து தேநீர் விடுதி ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில், காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
யூதரா என விசாரித்து முகத்தில் குத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் Maccabi Tel Aviv அணி ரசிகர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது பெர்லினின் Makkabi Berlin அணி உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
ஆம்ஸ்டர்டாமில் உருவாகியுள்ள வன்முறை சம்பவங்கள் எஞ்சியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |