மீண்டும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி! ஜாம்பவான் ஜெயசூர்யா வேதனையுடன் வெளியிட்ட பதிவு
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்து தொடரை இலங்கை அணி இழந்துள்ள நிலையில் சனத் ஜெயசூர்யா அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் ஏற்கனவே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 381 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 344 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து 37 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 126 ஓட்டங்களுக்குள் சுருண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பின்னர் பின்னர் 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இலங்கை அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களை இழந்து வருவது கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா டுவிட்டரில், "விளையாட்டுகளில் தோல்வி பொதுவானது, ஆனால் இன்று இலங்கையின் பேட்டிங் காட்சி நான் பார்த்த மிகவும் ஏமாற்றமளிக்கும் காட்சிகளில் ஒன்றாகும். தேசிய பெருமை ஆபத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
Failure is common in sports however today batting display by Sri Lanka was one of the most disappointing displays I have seen. Remember National pride is at stake boys
— Sanath Jayasuriya (@Sanath07) January 25, 2021