திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 5 பேர் பலி! இரண்டு குழந்தைகள் பரிதாப மரணம்
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் காரில் திருமணத்திற்கு சென்று திரும்பியவர்களில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருமண விழா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தோரியா கிராமத்தில் இருந்து, 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டிகோடியில் நடந்த திருமண விழாவிற்கு குழந்தைகள் உட்பட 10 பேர் கார் ஒன்றில் சென்றுள்ளனர்.
திருமணத்தை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது கிரிதி மாவட்டத்தில் பாக்மாரா பகுதியில் கார் செல்லும்போது, எதிர்பாராத விதமாக அங்குள்ள மரம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
File pic: Road accident
இதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.
ஐந்து பேர் அனுமதி
இதுகுறித்து கிரிதி சப்-டிவிஷனல் பொலிஸ் அதிகாரி அனில் சிங் கூறுகையில், 'காரில் இருந்தவர்கள் பிர்னி காவல் நிலையப் பகுதியில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டிகோடியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீதமுள்ள ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநர் தூங்கியிருக்கலாம்' என தெரிவித்துள்ளார்.
Representational
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |