Jigarthanda: கோடை வெயிலுக்கு குளுகுளு ஜிகர்தண்டா: வீட்டிலேயே செய்யலாம்
மதுரை ஸ்பெஷல் என்றாலே அது ஜிகர்தண்டா தான்.
அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு ஜிகர்தண்டா குடித்தால் அவ்வளவு இதமாக இருக்கும்.
அந்தவகையில், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொழுப்பு நிறைந்த பால்- 1 லிட்டர்
- சர்க்கரை- 1 கப்
- பாதாம் பிசின்- 4
- நன்னாரி சர்பத்- 2 ஸ்பூன்
- ஐஸ் கிரீம்- 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் பாதாம் பிசினை முன்னாடி நாள் இரவே தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்து கேரமல் பதம் வரும்வரை நன்கு காய்ச்சி பின் அதில் சுடு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு பால் கோவா போல் சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் மீதம் உள்ள பால் சேர்த்து கொதித்ததும் அதில் 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் கேரமலை பாதி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் எடுத்துவைத்துள்ள ஐஸ் கிரீமில் மீதமுள்ள கேரமலை சேர்த்து கலந்து பின் பிரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கப்பில் பாதாம் பிசின், நன்னாரி சர்பத், பால் கோவா, செய்துவைத்த பால் மற்றும் ஐஸ் கிரீம் சேர்த்து குடித்தால் சுவையான ஜிகர்தண்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |