43 வயதில் Wild Card ஒப்பந்தம்! களமிறங்கும் 704 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான்
இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் உடன் வைல்டு கார்டு ஒப்பந்தத்தைப் பெற்றார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்த ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson).
ஓய்வு பெற்ற ஆண்டர்சன் 100s தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவர் 31,000 பவுண்டுகள் Wild Card ஒப்பந்தத்தைப் பெற்றார்.
இதன்மூலம் 43 வயதில் ஆண்டர்சன் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குறுகிய வடிவ கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
ராக்கி பிளின்டாஃப்
அதே சமயம் முன்னாள் வீரர் ஆண்ட்ரு பிளின்டாஃபின் மகனான ராக்கி பிளின்டாஃப் Northern Superchargers அணியில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக சதம் விளாசியிருக்கிறார். மேலும் சமீபத்தில் இங்கிலாந்தின் U19 அணியில் விளையாடி இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |