ஜூலை 3-ஆம் திகதிக்கு முன் ரீசார்ஜ் செய்தால் 600 ரூபாய் சேமிக்கலாம்!
அனைத்து மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களும் மேப்பில் திட்டங்களின் விலையில் உயர்த்தியுள்ளதால், ஜூலை 3-ஆம் திகதிக்கு முன் ரீசார்ஜ் செய்துவிட்டால் 600 ரூபாய் வரை சேமிக்கலாம்.
இந்தியாவில் உள்ள ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 22 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
இதில், ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் புதிய விலைகள் ஜூலை 3 முதல் பொருந்தும் மற்றும் வோடபோன்-ஐடியாவின் புதிய கட்டணங்கள் ஜூலை 4 முதல் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், இந்த திகதிகளுக்கு முன் ரீசார்ஜ் செய்தால், 600 ரூபாய் வரை சேமிக்கலாம்.
ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.2999 திட்டம் ரூ.3599-ஆக அதிகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், வோடபோன்-ஐடியாவின் ரூ.2899 திட்டம் ரூ.3499-ஆக அதிகரிக்கப்படுகிறது.
இந்தப் புதிய விலை அமுலுக்கு வரும் முன், 365 நாட்கள் அதாவது 1 வருடம் வேலிடிட்டியுடன் வரும் இத்திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 மிச்சமாகும்.
இதேபோல், விலை உயர்வுக்கு முன், மற்ற ரீசார்ஜ்களிலும் வெவ்வேறு தொகைகளைச் சேமிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |