மிகப்பெரிய IPO-வை அறிவித்துள்ள ஜியோ., இந்தியா வரலாற்றில் புதிய சாதனை
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய IPO-வை அறிவித்துள்ளது.
SEBI-க்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, IPO மூலம் சுமார் 4 பில்லியன் டொலர் (ரூ.37,700 கோடி) திரட்டப்பட உள்ளது. இது இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய IPO ஆகும்.
இந்த IPO மூலம் 27 கோடி புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகவிலையுடன் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் 2.9 சதவீதன் பங்கு குறைப்பு (equity dilution) ஏற்படும்.

IPO மூலம் கிடைக்கும் நிதி, ஜியோவின் கடன்களை குறைப்பதற்கும் (மார்ச் 2026 நிலவரப்படி ரூ.27,579 கோடி நிலுவை கடன்) மற்றும் நிறுவனத்தின் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
முன்னதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜியோ IPO முழுமையாக புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் நடைபெறுகிறது. இதனால், IPO-வின் முழு வருவாய் நிறுவனத்திற்கே கிடைக்கும்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, “இந்த IPO மூலம் இந்தியா உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கும் திறன் கொண்ட நாடு என்பதை நிரூபிக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், “இது ரிலையன்ஸ் குடும்பத்திற்கும், பங்குதாரர்களுக்கும் மிக முக்கியமான தருணம்” என அவர் தெரிவித்தார்.
பங்குகளின் விலை ‘புக் பில்டிங்’ முறையில் பின்னர் தீர்மானிக்கப்படும். IPO அளவு ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், ஜியோ IPO இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய IPO ஆகும். இதற்கு முன் NSE (National Stock Exchange) IPO சுமார் ரூ.30,000 கோடி அளவில் இருக்கும் என கூறப்பட்டது.
Google, Meta, Abu Dhabi Investment Authority போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளதால், IPO-க்கு உலகளாவிய கவனம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |