குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்புக்கு ஜியோ ஷீல்டு செயலி அறிமுகம்
jio launches jioshield for safety and monitor: குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்புக்கு ஜியோ ஷீல்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ ஷீல்டு செயலி
குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தாலோ அல்லது முதியவர்கள் தனியாக இருந்தாலோ அவர்களின் இருப்பிடம் முதல் அவசர கால SOS எச்சரிக்கைகள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளும் வகையில் ஜியோ ஷீல்டு (JioShield) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோஷீல்டு குடும்பப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் செயல்பாட்டு மேலாண்மையை மையமாகக் கொண்ட பல அம்சங்களை வழங்குகிறது.
இதன் மூலம், பெற்றோர்கள் தங்களது இணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினரின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், அது தொடர்பான பாதுகாப்பு அறிவிப்புகளையும் பெறவும் முடியும்.
இதன் மூலம் குழந்தைக்கோ அல்லது வயதான குடும்ப உறுப்பினருக்கோ உதவி தேவைப்படும்போது SOS எச்சரிக்கை மூலம் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கலாம்.
மேலும், ஒரு குழந்தை எந்தெந்த செயலிகளை, தொடர்புகளை அணுகலாம் என்பதையும்., எவ்வளவு நேரம் திரையை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணித்து, கட்டுப்படுத்தவும் முடியும். இ
தற்கு பெற்றோர்கள் போனில் JioThings செயலியையும், குழந்தைகள் அல்லது முதியவர்களின் போனில் JioShield செயலியையும் நிறுவ வேண்டும்.
இது தற்போது ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது மற்றும் இதன் iOS பதிப்பு அக்டோபர் 1, 2026 முதல் கிடைக்கும்.
JioShield செயலிக்கான ஆண்டு கட்டணம் ரூ1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10 ரீசார்ஜ் வவுச்சர்
அதேவேளையில் ஜியோவின் ஆண்டுவிழாச் சலுகையின் கீழ் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், தலா ரூ.100 மதிப்புள்ள ப10 ரீசார்ஜ் வவுச்சர்களைப் பெறுவார்கள், இதன் மொத்த மதிப்பு ரூ.1,000 ஆகும்.

இந்த வவுச்சர்களை, வரம்பற்ற 5ஜி திட்டங்களில் ரூ.399 மற்றும் அதற்கு மேற்பட்ட ஜியோ ரீசார்ஜ்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரூ. 4,000 மதிப்புள்ள 12 மாத கேன்வா ப்ரோ மற்றும் 28 நாட்களுக்கு வரம்பற்ற 5ஜி மேம்படுத்தலும் இதில் அடங்கும்..
இந்த ஆண்டுவிழாச் சலுகை செப்டம்பர் 26, 2026 முதல் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.