இனி டிவியையே கணினியாக பயன்படுத்தலாம் - ஜியோவின் புதிய திட்டம்
டிவியையே கணினியாக பயன்படுத்தும் வகையில் JIOPC சேவையை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
கணினியாக மாறும் டிவி
இந்தியாவில், 70% வீடுகளில் டிவி இருப்பதாகவும், அதவேளையில், 15% பேர் மட்டுமே தனிப்பட்ட கணினியை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் உள்ள தொலைக்காட்சியை, கிளவுட் அடிப்படையில் தனிப்பட்ட கணினியாக பயன்படுத்தும் வகையிலான சேவையை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான JIO platforms, இந்தியாவில் JIOPC என்னும் புதிய சேவையை அறிமுகப்படுகிறது.
இதன் மூலம், ஜியோவின் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இணைய இணைப்பு இருந்தால், பயனர்கள் தங்கள் டிவி திரையை கணினியாக அணுக முடியும்.
என்ன சிறப்பு?
தற்போது, இலவச சோதனை கட்டத்தில், காத்திருப்புப் பட்டியலில் உள்ள JioPC பயனர்களுக்கு அழைப்பு மூலம் இந்த சேவை கிடைக்கிறது.
இதில் பதிவுசெய்ததும், பயனர்கள் தங்கள் தொலைக்காட்சியுடன், ஒரு விசைப்பலகை(keyboard) மற்றும் மவுஸ் இணைத்து கணினியாக பயன்படுத்தத் தொடங்கலாம்.
இதில் முன்பே நிறுவப்பட்ட LibreOffice உடன் வருகிறது. மேலும் வலை உலாவி(Web browser) வழியாக Microsoft Office கருவிகளை பயன்படுத்த முடியும்.
அதேவேளையில், வெப் கேமரா, பிரிண்டர் போன்ற வெளிப்புற சாதனங்களை தற்போது தொலைக்காட்சியுடன் இணைக்க முடியாது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த JioPC சேவை, ஜியோ செட்டப் பாக்ஸின் வீட்டு பிராட்பேண்ட் தொகுப்புகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது அல்லது ரூ.5,499க்கு தனித்தனியாக வாங்கலாம்.
Jio Set Top Box உடன் இணைக்கப்பட்ட உங்கள் டிவியில், apps பிரிவுக்குச் சென்று, JioPC என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அதன் பின்னர், USB அல்லது ப்ளூடூத் மூலம் இயங்கும் விசைப்பலகை(keyboard) மற்றும் மவுஸை, ஜியோ செட்டப் பாக்ஸ் உடன் இணைக்கவும்.
அதன் பின்னர், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் தானாக நிரப்பப்பட்ட பின்னர், டிவியில் "continue " மற்றும் "Launch Now" என்பதைக் கிளிக் செய்து, JIOPC சேவையை பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |