தமிழகப் பள்ளிகளில் ஜியோவின் புதிய இலவச AI கல்வித் திட்டம்
தமிழகப் பள்ளிகளில் ஜியோ AI கிளாஸ்ரூம் என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.
AI கல்வித் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தமிழகத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்க்க புதிய AI கல்வித் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஜியோ மற்றும் Google Gemini இணைந்து, கல்விக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றன.

முக்கியமாக, ஜியோ AI கிளாஸ்ரூம் என்ற 4 வார இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் மாணவர்கள் AI-யின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளலாம்.
மேலும், ஜியோ அன்லிமிடெட் 5G பயனாளர்களுக்கு ₹35,100 மதிப்புள்ள Google Gemini Pro சந்தா 18 மாதங்களுக்கு இலவசம்.

இதன் மூலம் 2 TB கிளவுட் ஸ்டோரேஜ், உயர்தர படங்களை உருவாக்கும் கருவி, வீடியோ உருவாக்கும் வசதி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் உருவாக்கவும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |