ஜியோவின் புத்தாண்டு பரிசு: ரூ.2025க்கு அன்லிமிடெட் டேட்டா + கூடுதல் சலுகைகள்!
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மிகவும் ஈர்க்கக்கூடிய புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த “புத்தாண்டு வெல்கம் பிளான்" என்பது, அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 5G டேட்டா ஆகியவற்றை மட்டுமல்லாமல், ஷாப்பிங், உணவு மற்றும் பயணம் ஆகியவற்றில் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டம் ரூ.2,025க்கு கிடைக்கிறது மற்றும் ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து 200 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் 5G இல்லாத பகுதிகளில் நாளொன்றுக்கு 2.5GB டேட்டா வீதம் மொத்தம் 500GB 4G டேட்டா வழங்கப்படுகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
கூடுதல் சலுகைகள்
Ajio, Swiggy, EaseMyTrip.com போன்ற பிரபல தளங்களில் ஷாப்பிங், உணவு ஆர்டர் மற்றும் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் மாதாந்திர ரூ.349 திட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.468 வரை சேமிக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |