10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் Jio-வின் 5ஜி மொபைல் - கசிந்த புகைப்படங்கள்
விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் Jio Phone 5G-யின் நேரடி படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.
Jio Phone 5G-கசிந்த புகைப்படங்கள்
இந்தியாவின் மிக பெரிய 5ஜி நெட்வொர்க் நிருவனமான ரிலயன்ஸ் ஜியோ 10,000 ரூபாய்க்கும் குறைவாக புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோன் Jio Phone 5G-ஐ வெளியிடவுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது அறிமுகமாகும் முன்பே Jio Phone 5G போனின் சில படங்கள் வெளிவந்துள்ளன.
அர்பித் பட்டேல் என்ற ட்விட்டர் உபபோக்தாதான் படங்கள் பகிர்ந்துகொண்டது. செங்குத்தாக காட்சியளிக்கும் கேமரா மோட்யூலும், ரிலையன்ஸின் தனித்துவமான அடர் நீல நிற பேனலும் படத்தில் காணப்படுகிறது. அதன் கீழ் ஜியோவின் பிராண்டிங் உள்ளது.
கேமரா அமைப்பு
13-மெகாபிக்சல் AI கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். எல்இடி ஃபிளாஷுக்கு மற்றொரு கட்அவுட் உள்ளது. மேலும், முன்புறம் ஐந்து எம்பி கேமராவும் இந்த மொபைலில் இருக்குமென ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
6.6 இஞ்ச் டிஸ்ப்ளே, முன்புற பேனலில் வாட்டர் டிராப் நாட்ச் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 ரூபாய்க்கு கீழ் விலை
ரூ. 10,000க்கு குறைவான ஸ்மார்ட்போன்களுக்கான பொதுவான வடிவமைப்பு இதில் காணப்படும் நிலையில், Jio Phone 5G போனின் சரியான விலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. விலை அதற்கும் கீழே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைலில் 5ஜி வேகத்தை பரிசோதிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் 479 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் விரைவாக ஸ்கிரீனில் காணப்படுகிறது. இது உண்மையான போனின் டம்மி மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சில நேரங்களில் வெளியிடப்பட்ட தொலைபேசியில் மேலும் மாற்றங்களுண்டாகும்.
ஜியோ ஃபோன் 5ஜியில் டைமென்சிட்டி 700 SoC அல்லது யுனிசாக் 5ஜி சிப்செட் இருக்கலாம் என்றும் ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார். போனை பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் ஜியோபோன் 5ஜியின் வரவு குறைந்த செலவில் 5ஜி சேவைகளை வழங்குவதற்கு மக்களை பிராப்தமாக்குகிறது.
ரிலையன்ஸ் Jio Phone 5G தீபாவளி அல்லது புத்தாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.
Jio Phone 5G, Reliance Jio, 5g Smartphone, 5G Smartphones under 10000, 5G Smartphones below 10000
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |