1,600 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள ஜியோ
jio plans 1600 satelites for expand connectivity in india: ஜியோ, 1,600 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
1,600 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ள ஜியோ
இந்தியாவின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனமான ஜியோ, தனது இனைய சேவைக்கு வழக்கமான மொபைல் கோபுரங்கள் மற்றும் ஃபைபர் நெட்வொர்க்குகளுக்கு அப்பால் செயற்கை கோள் மூலமான இணைப்பை ஏற்படுத்த உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2026 நிகழ்வில், 'இறையாண்மை செயற்கைக்கோள் இணைப்பு' என்ற தலைப்பின் கீழ் இந்த முன்னெடுப்பை அறிவித்துள்ளது.
இதன்படி, சுமார் 1,600 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு விண்மீன் கூட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும், அதனை இணைக்க நாடு முழுவதும் 23 தரை நிலையங்களை உருவாக்க உள்ளது. இந்த நிலையங்கள், செயற்கைக்கோள் வலையமைப்பைத் தரையில் உள்ள உள்கட்டமைப்புடன் இணைப்பதோடு, ஜியோவின் தரைவழி வலையமைப்புடன் செயற்கைக்கோள் இணைப்பை ஒருங்கிணைக்கவும் உதவும்.
இதன் மூலம் , ஃபைபர் கேபிள் பதிப்பது அல்லது மொபைல் கோபுரங்களை நிறுவுவது கடினமாக உள்ள பகுதிகளுக்கு இணைய இணைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
"வடிவமைப்பு, பொறியியல், ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை முதல் ஏவுதல், நிலைநிறுத்துதல் மற்றும் செயல்பாடுகள் வரை" முழு மதிப்புச் சங்கிலியையும் இந்தியாவிற்குள்ளேயே வைத்திருக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
ஸ்டார்லிங்கை எதிர்கொள்ள திட்டம்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கை எதிர்கொள்ளும் வகையில் ஜியோ இந்த முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை இந்தியாவின் பிரதமர் என குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைவதை செல்வந்தர்கள் தடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்டார்லிங்க் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்கைகோள் வழியாக இணைய சேவையை வழங்கி வருகிறது.
11,000க்கும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ள எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், அதன் மூலம் 12 மில்லியனுக்கு அதிகமான பயனர்களுக்கு இணைய சேவை வழங்கி வருகிறது.
மேலும், 1 லட்சம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவ அனுமதி கோரி, அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் (FCC) ஸ்டார்லிங்க் விண்ணப்பித்தது.