ஜியோ பயனர்களுக்கு கிடைக்க உள்ள AI உதவியாளர் வசதி - ஆகாஷ் அம்பானி அறிவிப்பு
ஜியோ பயனர்களுக்கு ஜியோ ஏஐ உதவியாளர் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஜியோ ஏஐ உதவியாளர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ பயனர்களுக்கான ஜியோ ஏஐ கால் ஏஜென்ட் மற்றும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட உள்ள மைஜியோ ஏஐ செயலி குறித்த அறிவிப்பை ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.

இந்த ஏஐ உதவியாளரை நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வலையமைப்பில் நேரடியாக ஒருங்கிணைக்கப்படுவதால், இதனை பயன்படுத்த தனியாக எந்த செயலியும் தேவையில்லை.
ஜியோ பயனர்கள் ஹே ஜியோ (Hey Jio) என்று கூறுவதன் மூலம் இந்த ஏஐ உதவியாளரை இயக்க முடியும்.

இதன் மூலம், பயனர்கள் செல்போனில் பேசும் போது, அனுமதி அளித்தால் பேசுவதை உரையாக மாற்றி எழுத்து வடிவில் வழங்கும்.
10 பயனர்கள் குழு அழைப்பில் பேசினாலும், அவரவர்கள் பேசியதை துல்லியமாக உரையாக மாற்றி வழங்கும். குறிப்பாக நீங்கள் கேட்கும் மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கும்.
பேசி முடித்ததும், தானாகவே உரையாடலின் முக்கிய அம்சங்கள், செய்ய வேண்டியவை பட்டியல் மற்றும் நினைவூட்டல்களை உருவாக்கி, காலில் பேசிய அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும்.
இதே போல், போன் பேசிக்கொண்டிருக்கும் போதே, உணவு ஆர்டர் செய்யவோ, வாடகைக் காரை முன்பதிவு செய்யவோ, பரிவர்த்தனை மேற்கொள்ளவோ முடியும்.
இதே போல், ரீசார்ஜ் செய்யவும் கணக்கு விபரங்களை அறியவும் ஜியோ பயனர்கள் பயன்படுத்தி வந்த மைஜியோ செயலியில், பல்வேறு மெனுக்களைத் தேட வேண்டிய அவசியமின்றி, தங்களுக்குத் தேவையானதை நேரடியாகக் கூறினாலே ஏஐ அதனைச் செய்து முடிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளது.
உதாரணமாக, நீங்கள் வெளிநாடு பயணம் செய்தால், இந்தச் செயலி சரியான ரோமிங் பேக்குகளைக் காண்பிப்பதுடன், நிகழ்நேர எச்சரிக்கைகளையும் அனுப்பும்.
மேலும், இ-சிம் போன்ற சேவைகளுக்கான சுய KYC செயல்முறைகளை எளிதாக்குவது போன்ற பணிகளை இந்த செயலி மேற்கொள்ளும்.
இந்த ஆண்டில் இறுதிக்குள் 510கோடிக்கும் அதிகமான ஜியோ பயனர்களுக்கு இந்த சேவை கிடைக்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |