ஜியோ பயனர்களுக்கு ரூ.35,1000 மதிப்புள்ள Gemini Pro AI இலவசம் - எப்படி பெறுவது?
ரூ.35,1000 மதிப்புள்ள Gemini Pro AIவை ஜியோ பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
Gemini Pro AI இலவசம்
ChatGPT, Gemini, Proplexity போன்ற AI செயலிகள் பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயலிகளை அனைத்து பயனர்களும் இலவசமாக பயன்படுத்த முடியும்.

ஆனால் கூடுதல் அம்சங்களுடன் கூடிய Pro, Plus போன்ற பதிப்புகளை பயன்படுத்த கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆக வேண்டும்.
Powering India’s AI future, together 🇮🇳✨#SundarPichai #GoogleGemini #AI #JioxGoogleGemini https://t.co/QKdSXShnJK
— Reliance Jio (@reliancejio) October 31, 2025
தற்போது, ரூ.35,1000 மதிப்புள்ள Gemini AI pro பதிப்பை ஜியோ பயனர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் அறிவித்துள்ளது.
இதில் கிடைக்கும் வசதிகள்
Gemini 2.5 Pro
2 TB கிளவுட் ஸ்டோரேஜ்

Veo 3.1 வழியாக வீடியோ உருவாக்கம்
நானோ வாழைப்பழம் மூலம் பட உருவாக்கம்
NotebookLM
எப்படி பெறுவது?
முதற்கட்டமாக 18 முதல் 25 வயதுடைய 349 ரூபாய்க்கு அதிகமுள்ள அன்லிமிடெட் 5G சேவையை பயன்படுத்தும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

விரைவில் அனைத்து ஜியோ பயனர்களுக்கு இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பயனர்கள், MyJIO செயலியில் காட்டப்படும் கூகிள் ஜெமினி சலுகை பேனரைப் கிளிக் செய்து, ஜிமெயில் கணக்கை பதிவு செய்து பயன்படுத்தலாம்.
இந்த சலுகையை 18 மாதங்களுக்கும் தொடர்ந்து பெற, தகுதியுள்ள ரீசார்ஜ் திட்டத்தை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        