இந்தியாவில் JioTag 2 அறிமுகம்., குறைந்த விலையில் ஸ்மார்ட் டிராக்கர்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய ஜியோடேக் 2 (JioTag 2) சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ரூ.1,249 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. வங்கி சலுகையுடன் வாங்கினால், ரூ.1,199 விலையில் கிடைக்கும்.
ஜியோடேக் 2, முந்தைய ஜியோடேக் மாடலை விட மேம்பட்ட வடிவமைப்புடன் வருகிறது. இது கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சாதனம் பாலிகார்பனேட் (Polycarbonate) பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, ஜியோடேக் 2 இப்போது iOS மற்றும் Android இரண்டிலும் வேலை செய்கிறது. முந்தைய மாடல் ஒரே பிளாட்ஃபார்மில் மட்டுமே இயங்கியது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
சாதனத்தில் 120dB சத்தம் உண்டாக்கும் ஸ்பீக்கர் உள்ளது. இதனால், ப்ளூடூத் வரம்புக்குள் இருக்கும் போது பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
ப்ளூடூத் வரம்புக்கு வெளியே சென்றால், மேப் வழிகாட்டி (Map Directions) மூலம் பொருட்களின் இருப்பிடத்தை அறியலாம்.
ஜியோடேக் 2, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த டிராக்கிங் சாதனங்களுக்கு மாற்றாக, இந்திய பயனர்களுக்கு மலிவான தேர்வாக அமைகிறது. தற்போது, இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |