228 ரன் இலக்கை 19வது ஓவரிலேயே சேஸ் செய்த பெங்களூரு! ருத்ர தாண்டவமாடிய கேப்டன்
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரிஷாப் பண்ட் 118 ஓட்டங்கள்
அடல் பிகாரி வாஜ்பாயீ மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ அணி 227 ஓட்டங்கள் குவித்தது. ரிஷாப் பண்ட் 118 (61) ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 67 (37) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பிலிப் சால்ட் அதிரடியாக 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார்.
Built different. ™️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 27, 2025
pic.twitter.com/GLm9tadOoF
அடுத்து வந்த ரஜத் படிடார் (14), லிவிங்ஸ்டன் (0) வந்த வேகத்தில் வெளியேற விராட் கோஹ்லி (Virat Kohli) அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 30 பந்துகளில் எதிர்கொண்ட கோஹ்லி 10 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி ஆவேஷ்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஜித்தேஷ் ஷர்மா மிரட்டல் ஆட்டம்
அதன் பின்னர் அணித்தலைவர் ஜித்தேஷ் ஷர்மா, மயங்க் அகர்வால் கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
மயங்க் அகர்வால் (Mayank Agarwal) நிதானமாக ஓட்டங்களை எடுக்க, ஜித்தேஷ் ஷர்மா (Jitesh Sharma) ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட பெங்களூரு அணி 18.4 ஓவரிலேயே 230 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Big over to shift the momentum! 🧿🔥
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 27, 2025
We need more of it, boys! 💪#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #LSGvRCB pic.twitter.com/7q1H2TAwvn
ஜித்தேஷ் ஷர்மா 33 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்களும், மயங்க் 23 பந்துகளில் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சண்டிகரில் 29ஆம் திகதி நடைபெற போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |