தோல்வியை தழுவியது நல்லதுதான்: பெங்களூரு கேப்டன் கூறிய காரணம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றது குறித்து, பெங்களூரு அணித்தலைவர் ஜித்தேஷ் ஷர்மா கருத்து தெரிவித்தார்.
SRH அணியிடம் தோல்வி
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் RCB அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் SRH அணியிடம் தோல்வியுற்றது.
இதனால் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸை சந்திக்கிறது.
Ngl, almost had us there. 😅 pic.twitter.com/TVlhpdA1q7
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 23, 2025
ஜித்தேஷ் ஷர்மா
போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய RCB அணித்தலைவர் ஜித்தேஷ் ஷர்மா, "20-30 ஓட்டங்கள் கூடுதலாக இருந்ததாக நான் நினைக்கிறேன், எனக்கு எந்த பதிலும் இல்லை (அந்த சூழ்நிலையில் ஆர்சிபி எப்படி தோற்றது) நாங்கள் துருப்பிடித்திருந்தோம், தீவிரம் இல்லை என்று நினைக்கிறேன், ஆனால் இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது.
நான் வெளியேறியதால் வருத்தப்பட்டேன், காயமடைந்த டிம் டேவிட்டை சந்திக்க நான் அந்த மண்டலத்தில் இல்லை. இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது என்று நான் நினைக்கிறேன், நேர்மையான விடயங்கள் என்னவென்றால் நாங்கள் நன்றாக துடுப்பாட்டம் செய்கிறோம்" என்றார்.
Captains’ knock and it’s only just begun. 🤞 pic.twitter.com/TToz7EJTRL
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 23, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |