39 பந்துகளில் 111 ஓட்டங்கள் விளாசிய வீரர்! மரண அடி வாங்கிய கென்யா
கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபியா 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஜேஜே ஸ்மித்
ஹராரேயில் நடந்த டி20 போட்டியில் நமீபியா மற்றும் கென்யா அணிகள் மோதின. முதலில் ஆடிய நமீபியா அணியில் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 32 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய ஜேஜே ஸ்மித் (JJ Smit) சிக்ஸர் மழை பொழிந்தார். சரவெடி ஆட்டம் ஆடிய அவர் 39 பந்துகளில் 111 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் நமீபியா 5 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து, ஆடிய கென்யா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக சுக்தீப் சிங் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
அலெக்ஸாண்டர் வோல்ஸ்சென்க், ஸ்கோட்ஸ் மற்றும் ஈட்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |