ஐரோப்பிய டி20 போட்டியில் 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட வீரர்
பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேஜே ஸ்முட்ஸ் 98 ஓட்டங்கள் விளாசினார்.
பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் வீரர் ஜேஜே ஸ்முட்ஸ் 60 பந்துகளில் 98 ஓட்டங்கள் விளாசினார்.
ஜேஜே ஸ்முட்ஸ்
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, எடின்பர்க் கேஸல் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
ரோஸ் அடைர் 9 ஓட்டங்களிலும், கோஸ் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஜேஜே ஸ்முட்ஸ் (JJ Smuts) அதிரடி ஆட்டத்தில் மிரட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
மறுமுனையில் பிரண்டன் மெக்முல்லன் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
189 ஓட்டங்கள் குவிப்பு
அணியின் ஸ்கோர் 171 ஓட்டங்களாக உயர்ந்தபோது ஜேஜே ஸ்முட்ஸ் 98 (60) ஓட்டங்களில் (3 சிக்ஸர், 11 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 13 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் விளாச, எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 189 ஓட்டங்கள் குவித்தது.
மார்க் அடைர், ஃப்ரெட் கிளாசென் தலா 2 விக்கெட்டுகளும், சௌரப் நெத்ரவால்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |