பட்டப் பகலில் பயங்கரம்! பொலிசாரை துடி துடிக்க இரத்த வெள்ளத்தில் சுட்டுக் கொல்லும் தீவிரவாதி: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி வீடியோ
ஜம்மு காஷ்மீரில் பொலிசாரை பின் தொடர்ந்த தீவிரவாதி அவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் Kupwara-வைச் சேர்ந்தவர் Arshid Ashraf. இவர் அங்கிருக்கும் ஸ்ரீநகரின் Khanyar-வில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வந்தார்.
இந்நிலையில், இவர் இன்று அப்பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து முகமூடி அணிந்து வந்த தீவிரவாதி, அவரின் தலை பின் பகுதியில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
J&K Cop Arshid Ashraf Meer was a very young probationary officer. He was brutally killed from behind by coward terrorists in Srinagar, Kashmir today. Pakistan continues to kill innocent Kashmiri Muslims. Arshid was originally from Kupwara. India salutes your sacrifice! ?? pic.twitter.com/RwDnEJ3wEW
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 12, 2021
இதனால் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய Arshid Ashraf சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
மேலும், இது பாகிஸ்தானின் செயல் தான் எனவும், அந்த நாடு தீவிரவாதிகளை ஏவு, காஷ்மீரில் இருக்கும் நேர்மையான முஸ்லீம்களை கொன்றுவருவதாக கூறப்படுகிறது.