பார்த்தும் பார்க்காதது போல் சென்ற ரூட்... ஆனால் பின்னாடியே வந்த கோலி செய்த செயல்! வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்கு பின் கோஹ்லி செய்த செயலின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்கு பின், ஜோ ரூட் மற்றும் கோஹ்லி போட்டி குறித்து பேசிய பின் தங்களுடைய அறைக்கு திரும்பினர்.
Kohli shaab ❤️ pic.twitter.com/T6b4SOoFkK
— JuiceSprite Boobrah (@Yorker_Gawd) September 7, 2021
அப்போது அவர்கள் வரும் வழியில் ஒரு வாட்டர் பாட்டில் கிடந்துள்ளது. ஆனால், ரூட் அதை கண்டு கொள்ளாமல் செல்ல, அடுத்து வந்த கோஹ்லி அதை அப்படியே எடுத்துச் சென்றார்.
இந்த வீடியோவை இணையவாசிகள் கோஹ்லி மற்றும் ரூட் இருவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று வைரலாக்கி வருகின்றனர்.