Job: Typewriting தெரிந்தால் போதும்.., உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் அலுவல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்
கோர்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி
டைப்பிங் திறனை பொறுத்தவரை ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
தனி செயலர்/ சீனியர் பெர்சனல் அசிஸ்டண்ட்,/ பெர்சனல் அஸ்சிஸ்டண்ட்/ அரசு அல்லது பொதுத்துறை அமைப்புகளில் சீனியர் ஸ்டெனோகிராபர் ஆக குறைந்தது 5 ஆண்டுகள் பணி செய்து இருப்பது கட்டாயம்.
வயதுவரம்பு
குறைந்த பட்ச வயது 30 ஆகவும் அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
சம்பளம் ரூ.67,700 முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை
சுருக்கெழுத்து (ஆங்கிலம்) தேர்வு, கொள்குறி வகை எழுத்து தேர்வு, டைப்பிங் திறன், தேர்வு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.1,500 செலுத்த வேண்டும். எஸ்சி /எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.750 கட்டணம் ஆகும். மேலும், ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்க, வரும் 15.09.2025 கடைசி நாளாகும்.
மேலும், https://www.sci.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |