புதிதாக கனடாவுக்கு புலம்பெயர்ந்துவந்தவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வது எப்படி?: பயனுள்ள சில குறிப்புகள்
ஒரு புதிய புலம்பெயர்ந்தோராக, அல்லது கனடாவுக்கு புலம்பெயர விரும்புபவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்வது, கனடாவில் நீங்கள் உங்கள் புதிய வாழ்க்கையைத் துவங்குவதை எளிதாக்கும்.
வேலை தேடும் முறை, நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் நிலையில், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள் நீங்கள் கனடாவில் வேலைவாய்ப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
முக்கிய துறைகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சில குறிப்புகள்
நிதி சேவைத்துறை
வங்கி அல்லது வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களில் பணி செய்ய, உங்களிடம் கனேடிய பங்குகள் பயிற்சி சான்றிதழ் இருப்பது உதவியாக இருக்கும்.
தகவல் தொழில்நுட்பத்துறை
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன. உங்களை இத்துறை தொடர்பான பணி ஒன்றில் நிபுணராக நிரூபிப்பது வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம்.
மருத்துவத்துறை
கனடாவில், மருத்துவத்துறையில் பணி செய்வதற்கான தகுதி மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதால், நீங்கள் உங்களுக்கு ஏற்றது எனக் கருதும் மாகாணத்தை தேர்வு செய்வது அவசியமாகும்.
வர்த்தகத் துறை (Trades)
கனடா முழுவதும் வர்த்தகத் துறையில் (Trades) ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இத்துறையிலும் பணிக்கு தேர்வு செய்யும் முறையானது மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசப்படும். பயிற்சியும், பணி அனுபவமும் கூட அவசியம்.
மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து
மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத்துறையில் எப்போதுமே வேலை வாய்ப்புகள் இருக்கும். புதிதாக கனடாவுக்கு வந்தவராக, உங்களுக்கு நல்ல வருவாயில் செட்டில் ஆக இந்தத் துறை பெருமளவில் உதவியாக இருக்கும்.
வேலை வாய்ப்புக்களை தேடும் புலம்பெயர்ந்தோர், சேவை வழங்கல் அமைப்புகளின் உதவியை பயன்படுத்திக்கொள்ளலாம். Service Provider Organizations (SPOs) என்னும் இந்த அமைப்புகள், settlement or employment agencies என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்த கட்டணம் கிடையாது.
அவை, தற்குறிப்பு (Resume) எழுதுதல், மொழி வகுப்புகள், வேலை தேடுவதில் உதவி, நேர்காணலுக்கான பயிற்சி ஆகிய விடயங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும், புதிதாக கனடாவுக்கு வருவோர் bridging programs என்னும் கல்வித் திட்டங்கள் வாயிலாக பணி தேடுவது அவர்கள் வெற்றிகரமாக பணி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
நீங்கள் எந்த துறையைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்து நீங்கள் கல்வி, பயிற்சி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றிற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு...https://www.cicnews.com/2021/11/how-to-find-a-job-in-your-profession-or-trade-in-canada-1119581.html#gs.flz3o2