ஜேர்மனியில் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு - TOMCOM அறிவிப்பு
இந்தியாவில் தெலுங்கானா அரசு தொழிலாளர் துறை கீழ் செயல்படும் தெலுங்கானா ஓவர்சீஸ் மேன்பவர் கம்பெனி லிமிடெட் (TOMCOM), ஜேர்மனியில் ஆட்டோமொட்டிவ் துறையில் தொழில்நுட்ப நிபுணர் பணிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது.
வேலை விவரங்கள்
சம்பளம்: மாதம் 2800 முதல் 4000 யூரோக்கள் வரை
அனுபவம்: 3 முதல் 5 ஆண்டுகள் பிரபலமான பிராண்டுகளில் (Mercedes, Skoda, Hyundai, Kia, Nissan, Opel, Ford, Volvo, Volkswagen, Fiat) வேலை செய்த அனுபவம் அவசியம்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் துறையில் இளங்கலை அல்லது டிப்ளமோ (குறைந்தது 3 ஆண்டுகள்)
வயது வரம்பு: 20 முதல் 40 வயது
பயிற்சி மற்றும் விண்ணப்பம்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜேர்மனியில் பணிக்கு முன்னதாக 6 முதல் 9 மாதங்கள் ஜேர்மன் மொழிப் பயிற்சி பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ளவர்கள் TOMCOM இணையதளம் அல்லது மொபைல் பயன்பாட்டின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம்: [www.tomcom.telangana.gov. (http://www.tomcom.telangana.gov.in)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Job opportunity, Job opportunities in Germany, automotive technicians Job in Germany, TOMCOM