Student Nursing Training Course 2023- தாதியர் ஆக ஓர் அரிய வாய்ப்பு
இலங்கை சுகாதார அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் உத்தியோக பூர்வ இணையதளமான (www.health.gov.lk) ஊடாக மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
குறித்த பயிற்சிக்கு தகைமையுடையவர்கள் எதிர்வரும் (18.10.2023)ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரி இலங்கை பிரஜையாக இருத்தல் அவசியம்.
கல்வி தகைமைகள்
க.பொ.த சாதாரண தரத்தில் சிங்கள மொழி/தமிழ் மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 04 பாடங்களிலும் திறமை சித்தியுடன் இரண்டிற்கும் மேற்படாத அமர்வுகளில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
க.பொ.த உயர் தர பரீட்சையில் (பழைய பாடத்திட்டம்) அல்லது 2019 ஆம் ஆண்டில் (புதிய பாடத்திட்டம்) அல்லது 2020 ஆம் ஆண்டில் அல்லது 2020 ஆம் ஆண்டில் உயிரியல் விஞ்ஞான பிரிவிற்குரிய உயிரியல், இரசாயணவியல், விவசாயவியல், பௌதீக மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 03 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது க.பொ.த உயர் தர பரீட்சையில் (பழைய பாடத்திட்டம்) அல்லது 2019 ஆம் ஆண்டில் (புதிய பாடத்திட்டம்) அல்லது 2020 ஆம் ஆண்டில் அல்லது 2020 ஆம் ஆண்டில் பெளதிக விஞ்ஞானப் பிரிவிற்குரிய இணைந்த கணிதம் ,இரசாயணவியல், பௌதீகவியல் மற்றும் உயர் கணிதம் ஆகிய பாடங்களில் ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
03 வருட முழுநேர பயிற்சியின் பின்னர் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
ஏனைய விபரங்கள்
18.10.2023 ஆம் திகதிக்கு 18 வயதுக்கு குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
உயரம் 04 அடி 10 அங்குலத்திற்கு குறையாதிருத்தல் வேண்டும். திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும். ஆண்பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும்.