கனடாவில் வேலை வாய்ப்புகள் 72% அதிகரிப்பு!
கனடாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்துள்ளதாக Statistics Canada புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய Statistics Canada புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 874,700-க்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் செப்டம்பரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நேர உயர்விலிருந்து சரிவைக் கண்டாலும், நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டை விட 72% அதிகமாக உள்ளது.
Statistics Canada-ன் படி, வேலை காலியிடங்களின் விகிதம், மொத்த காலி மற்றும் நிரப்பப்பட்ட வேலை காலியிடங்களை ஒப்பிட்டு அளவிடுகிறது.
போக்குவரத்து மற்றும் கிடங்கு துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு 51,500 காலியிடங்கள் நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளன.
தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், சுகாதாரம் மற்றும் கட்டுமான துறைகள் அதிக வேலை காலியிடங்களால் பாதிக்கப்பட்ட மற்ற முக்கிய பொருளாதாரத் துறைகளாக உள்ளன.
2022-ன் ஆரம்ப மாதங்களில் கனடாவின் பொருளாதார முன்னேற்றம் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கபடலாம் என கூறப்படுகிறது.