கனடாவில் அதிகரித்துள்ள புலம்பெயர்வோரின் தேவை.. இன்னமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்கள் காலி..
கனடாவின் புள்ளியியல் துறை மேற்கொண்ட ஆய்வு ஒன்று, இன்னமும் கனடாவின் பல்வேறு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சேவைத்துறையில் அதிக அளவில் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி, மருத்துவம் மற்றும் சமூக உதவி போன்ற துறைகளில் 17,000 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன.
அத்துடன், கட்டுமானத்துறையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறைகளிலும் ஏராளம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒன்ராறியோவைப் பொருத்தவரை, சில்லறை வர்த்தகத் துறையில் பெருமளவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
மருத்துவத்துறையில் அதிக காலியிடங்கள் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தத் துறையில் 5.1 சதவிகிதம் அளவுக்கு வேலையில்லாத்திண்டாட்ட வீதம் அதிகரித்துள்ளது.
மருத்துவ மற்றும் சமூக உதவிகள் துறைகளில் 143,000 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. Nova Scotia மற்றும் மனித்தோபாவில் தங்குமிடம் மற்றும் உணவு சேவை தொடர்பான பணியிடங்கள் 161,000 காலியாக உள்ளன. ஆக, தற்போது கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
cicnews
பல்வேறு துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு உருவாகி வருவதுடன், ஏராளமானோர் ஓய்வு பெறவும் இருப்பதால், கனடாவில் புலம்பெயர்வோருக்கான தேவை அதிகரித்துள்ளது.
2022இல், 430,000 புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர குடியிருப்பு உரிமங்கள் வழங்க தற்போது கனடா திட்டமிட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 2024இல் 450,000 ஆக தொடர்ந்து உயர உள்ளது குறிப்பிடத்தக்கது.