வெளிநாட்டில் இருந்து கடும் விரக்தியுடன் திரும்பிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வேலையில்லாமல் இந்தியா திரும்பிய நபருக்கு கனவில் நினைத்து பார்க்காத அதிர்ஷம் அடித்துள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் Afsal Khalid. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். ஆதன் பின் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஒரு வேலையும் இல்லாமல் தவித்து வந்த இவர், சமீபத்தில் சொந்த ஊரான கேரளாவிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் திகதி துபாயில், Mahzooz வாரந்திர digital குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலில் வெற்றியாளர்களில் ஒருவராக Afsal Khalid பெயரும் இருந்தது.
இதன் மூலம் அவருக்கு இந்த லொட்டரி குலுக்கரில் உள்ளூர் மதிப்பில் 300000 லட்சம் திர்ஹாம் விழுந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு ரம்ஜான் பரிசு என்று தான் நான் கூறுவேன். இது கடவுளின் ஆசீர்வாதமாக நம்புகிறேன்.
கடந்த ஒரு வருடமாக வேலையில்லாமல், உட்கார்ந்தபின் நான் மிகவும் தாழ்ந்த மற்றும் மன சோர்வில் இருந்தேன். இது போன்ற நேரத்தில் நான் கடவுளை மட்டுமே நம்பியிருந்தேன்.
அப்போது தான் இந்த அதிஷ்டம் எனக்கு கிடைத்தது. கடந்த சனிகிழமை தன்னுடைய மின்னஞ்சலை சரிபார்க்க முடிவு செய்தேன். ஏனெனில், அன்று தான் Mahzooz வாரந்திர digital-ன் குலுக்கல் என்பதால், அதை சரிபார்த்தேன்.
அப்போது அந்த குலுக்கலில் நான் 333,333 திர்ஹாமை வென்றதாக குறிப்பிட்டிருந்தது. இதை பார்க்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. இரவு முழுவதும் தூக்கமில்லை. மறுநாள் காலை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வரும் வரை காத்திருந்தேன்.
அதன் பின்னரே இது உறுதியானது.
கிடைத்த இந்த தொகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை தொண்டு நிறுவனத்திற்கு கொடுகப் போகிறேன். ஏனெனில் இது கடவுள் எனக்கு கொடுத்தது. இப்படி நான் கொடுப்பதன் மூலம், அவருக்கு நான் நன்றி செலுத்துவது போன்று இருக்கும்.
மீதித் தொகையை வைத்து ஒரு சிறிய தொழில் செய்து இங்கே என் குடும்பத்துடனே இருக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.