ஃபிஜி தீவில் இந்தியர்களுக்கு என்னென்ன வேலைகள் உள்ளன தெரியுமா? விவரம் இதோ
தீவு தேசமான ஃபிஜியில் இந்தியர்களுக்கு எந்தெந்த துறைகளில் என்னென்ன வேலைகள் உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியர்களுக்கு உள்ள வேலைகள்
ஃபிஜி பலவிதமான வேலைகளை இந்தியாவில் இருந்து வரும் தனிநபர்களுக்கு வழங்குகிறது.
குறிப்பாக சுற்றுலாத்துறை, சேவைத்துறை மற்றும் ஐடியில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. இங்கு Long-term மற்றும் Short-term என கவனம் செலுத்தும் இருவிதமான துறைகளும் உள்ளன.
வேலை வாய்ப்புகள்
சுற்றுலா மற்றும் சேவைகள் ஃபிஜியில் உள்ள ஹொட்டல்கள், ரிசார்டுகள் மற்றும் பயணக்கப்பல்களில் வேலை என்பது பொதுவானவை.
இங்கு ஹொட்டல் அறை உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் போன்ற வேலைகளும் உள்ளன.
ஐடி மற்றும் தொழில்நுட்பம்
ஐடி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஃபிஜி வளர்ந்து வருகிறது. எனவே மென்பொருள் உருவாக்குநர்கள் (Software Developers), Network பொறியாளர்கள் மற்றும் ஐடி திட்ட மேலாளர்கள் (IT Project Managers) ஆகியோருக்கு வேலை வாய்ப்புகள் தாராளமாக உள்ளன.
நிதி மற்றும் கணக்கியல்
நிதி (Finance) சார்ந்த மேலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகளும் இங்குள்ளன. பொதுத்துறை பணிகள் தச்சர்கள் (Carpenters), மெக்கானிக் மற்றும் ஐடி ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற பணிகளும் உள்ளன.
அதேபோல் Spray Painters, Assistant Buyers மற்றும் Restaurant, Bakery Managers ஆகிய வேலை வாய்ப்புகளை Naukri.com பட்டியலிடுகிறது.
எங்கே காண்பது?
ஒன்லைன் வேலை வாய்ப்பு வலைத்தளங்களான Indeed, Naukri.com, My jobs Fiji மற்றும் LinkedIn ஆகியவை மூலம் உங்கள் வேலையை தேடலாம்.
ஃபிஜியின் குறிப்பிடத்தக்க வலைத்தளங்களான My Jobs Fiji மற்றும் eJobsFiji ஆகியவை மூலமும் தேடலை விரிவாக்கலாம்.
The Fiji Times என்ற உள்ளூர் பத்திரிகை ஊடகமும் வேலை வாய்ப்புகளை பட்டியலிடுகிறது. உங்களுக்கு ஏற்ற வேலையை Placement India எனும் ஏஜென்சியும் பெற்றுத்தர உதவுகிறது.
பரிசீலனை செய்ய வேண்டியவை
பணி அனுமதிகள் (Work Permits) ஃபிஜியில் பணிபுரிய உங்களுக்கு வேலை அனுமதி தேவைப்படும். அதனை உங்களுக்கு வேலை கொடுக்கும் ஃபிஜி பணியிட உயரதிகாரி பெற வேண்டும். அந்த சான்று, உங்கள் வேலைக்கு உள்ளூர்வாசிகள் யாரும் ஏற்றவர் அல்ல என்பதற்கானது.
விசா தேவைகள்
ஃபிஜியில் இந்திய குடிமக்கள் 120 நாட்கள் வரை இருக்க விசா தேவையில்லை. ஆனால் நீண்ட காலம் தங்குவதற்கு முறையான விசா தேவை.
ஊதிய எதிர்பார்ப்புகள்
ஃபிஜியில் ஊதியம் என்பது வேலை வகை மற்றும் அனுபவ அளவைப் பொறுத்து கணிசமாக மாறுபடும்.
வேலை சந்தை
ஃபிஜி வேலை வாய்ப்புகளை வழங்கினாலும், போட்டி கடுமையாக இருக்கும். எனவே பொருத்தமான திறன்கள் மற்றும் அனுபவத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |