இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் இத்தாலி: விண்ணப்பிப்பது எப்படி?
ஐரோப்பிய நாடான இத்தாலி இந்தியர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
இத்தாலியில் வேலை
இங்கு மென்பொருள் உருவாக்குநர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆங்கில மொழி ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மை ஆலோசகர்களுக்கு தேவைகள் உள்ளன.
இத்தாலியில் வயதான மக்கள்தொகை காரணமாக, நாட்டில் சுகாதார நிபுணர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
பணி அனுமதிகள் (Work Permits)
பணி அனுமதி அல்லது விசாவைப் பெறுவதற்கான முதல்படி வேலை வாய்ப்பைப் பெறுவதாகும்.
Employer Sponsorship
இத்தாலிய பணியமர்த்தும் நபர்கள் (Employer) வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஸ்பான்சர் செய்து, அவர்கள் சார்பாக விசாவிற்கு விண்ணப்பிக்கப்படுகிறார்கள்.
மொழித் திறன்கள்
இத்தாலியில் சில துறைகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டாலும், இத்தாலிய மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது வேலை வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தும்.
விசாவுக்கான தேவைகள்
பணி விசா: இத்தாலியில் பணிபுரிய உங்களுக்கு பொதுவாக வேலை விசா தேவை. இதனை வேலை வாய்ப்பை தரும் இத்தாலிய நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும்.
பணியமர்த்துபவரின் விண்ணப்பம்: வேலை செய்ய வருபவர்களுக்கு நிறுவன உரிமையாளர் பணி அனுமதி அல்லது விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்: உங்களது கடவுசீட்டு, CV மற்றும் சாத்தியமான கல்வித் தகுதிகள் போன்ற ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
தேவை உள்ள துறைகள்
ஐ.டி (IT)
மென்பொருள் உருவாக்குநர், தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, நிரலாக்கம் (Programming) ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
வணிக ஆலோசனை (Business Consultancy)
தொழில் மேலாண்மை மற்றும் உத்தி ஆலோசனை மற்றும் உணவு, ஒயின், உற்பத்தி பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
சுகாதாரம் (Healthcare)
செவிலியர் பயிற்சியாளர்கள், உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் பேச்சு மொழி நோயியல் நிபுணர்கள். குறிப்பாக முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகிய பிரிவுகளில் வேலைகள் உள்ளன.
கற்பித்தல் (Teaching)
STEM பாட ஆசிரியர்கள், ஆங்கில மொழி ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச பாடசாலை ஆசிரியர்களுக்கான தேவை உள்ளது.
இதர வேலைகள்
சட்டம், வங்கி, நிதி மற்றும் காப்பீடு, கட்டிடக்கலை மற்றும் படைப்பு கலைகள், பத்திரிகை, மொழிபெயர்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வாய்ப்புகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |