மலேசியாவில் இந்தியர்களுக்கான அதிக தேவை உள்ள வேலைகள்.., எளிதாக பெறுவது எப்படி?

Malaysia
By Sathya Mar 19, 2025 07:24 AM GMT
Report

மலேசியாவில் இந்தியர்களுக்காக எந்த மாதிரியான வேலைகள் இருக்கிறது என்பதையும், எப்படி பெறுவது என்பதையும் பார்க்கலாம்.

மலேசியாவில் வேலை

மலேசியா அதன் துடிப்பான கலாச்சாரங்கள் மற்றும் வளமான பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இங்கு பல சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய தலைமையகத்தை அமைத்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களுக்கு மலேசியா ஒரு விருப்பமான நுழைவாயிலாக வளர்ந்துள்ளது.

பன்முகத்தன்மை கொண்டதாகவும் பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாகவும் இருப்பதால், மலேசியா ஒரு சரியான பகுதியாகும். இது தொழில் ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ளவும் பல்வேறு துறைகளில் பணியாற்றவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

மலேசியாவில் இந்தியர்களுக்கான அதிக தேவை உள்ள வேலைகள்.., எளிதாக பெறுவது எப்படி? | Jobs In Malaysia For Indians

ஐடி துறையில் ஒரு நிபுணராகவோ, அதிக தகுதி வாய்ந்த சுகாதாரப் பணியாளராகவோ அல்லது பட்டம் பெற்று அனுபவத்தை விரிவுபடுத்த விரும்பும் இளம் நிபுணராகவோ இருந்தால் மலேசியாவில் வேலை செய்யலாம்.

மலேசியாவில் வேலை பார்க்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு விருப்பமாக உள்ளது. அதற்கு நீங்கள் வேலைவாய்ப்பு விசாவை பெற வேண்டும்.

வேலையின் தன்மை மற்றும் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்து வகையான மலேசிய வேலைவாய்ப்பு விசாக்களைப் பெற முடியும்.

இந்த மலேசியா வேலைவாய்ப்பு விசா என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாட்டினர் மலேசியாவில் வேலை செய்ய அனுமதிக்க உதவும்.

மலேசியாவில் இந்தியர்களுக்கான அதிக தேவை உள்ள வேலைகள்.., எளிதாக பெறுவது எப்படி? | Jobs In Malaysia For Indians

நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருந்தால், மலேசிய வேலை விசா கட்டாயம் தேவைப்படும். பின்னர் நீங்கள் வேலை பார்க்க போகும் மலேசிய நிறுவனம் உங்களை மலேசியாவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டுப் பிரஜையாக அமர்த்த வேண்டும்.

அடுத்ததாக, உங்கள் சார்பாக மலேசிய வேலை விசாவிற்கு உங்கள் முதலாளி விண்ணப்பிக்க வேண்டும்.

மலேசிய வேலை விசா வகைகள் (Malaysia Work Visa)

மலேசியா பல்வேறு தொழில்முறை தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான பணி விசாக்களை வழங்குகிறது.

மலேசியா வேலைவாய்ப்பு பாஸ் (Employment Pass (EP)

மலேசிய நிறுவனத்தால் நிர்வாக அல்லது தொழில்நுட்பப் பணிகளுக்காக பணியமர்த்தப்பட்ட உயர் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கு மலேசிய வேலைவாய்ப்பு பாஸ் வழங்கப்படுகிறது.

இருப்பினும், நிறுவனத்தின் முதலாளி இந்த வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டை வழங்குவதற்கு முன், உரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த வேலை அனுமதி 1 முதல் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இதனை புதுப்பிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

மலேசியாவில் இந்தியர்களுக்கான அதிக தேவை உள்ள வேலைகள்.., எளிதாக பெறுவது எப்படி? | Jobs In Malaysia For Indians

தற்காலிக வேலைவாய்ப்பு பாஸ் (Temporary Employment Pass)

மலேசியா தற்காலிக வேலைவாய்ப்பு பாஸ் இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது.

i) வெளிநாட்டு பணியாளர்

கட்டுமானம், விவசாயம், உற்பத்தி, தோட்டம் உள்ளிட்ட தொழில்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்ய இந்த பாஸ் அனுமதிக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் இந்த வெளிநாட்டு பணியாளர் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதிச்சீட்டைப் பெறலாம்.

ii) வெளிநாட்டு வீட்டு உதவியாளர்

இந்த வெளிநாட்டு வீட்டு உதவியாளர் பாஸ் ஆனது ஆனது அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இளம் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர்களை பராமரிக்கலாம்.

தொழில்முறை வருகை பாஸ் (Professional Visit Pass)

மலேசியாவிற்கு தற்காலிகமான வேலையில் (12 மாதங்கள் வரை) வர வேண்டிய வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படுகிறது.

குடியிருப்பு தேர்ச்சி-திறமை (Residence Pass-Talent (RP-T)

நீண்ட கால வேலைவாய்ப்பைத் தேடும் உயர் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கு இந்த பாஸ் வழங்கப்படுகிறது.

விசா பெற என்னென்ன தேவை?

1. பணி விசா விண்ணப்பம்

2. பாஸ்போர்ட்டின் நகல்

3. அண்மையில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

4. விமான டிக்கெட்டுகள்

5. மலேசியாவில் நீங்கள் பணிபுரியும் வேலை ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்

6. முந்தைய பணி அனுபவத்திற்கான சான்று

7. கல்வி தகுதிக்கான ஆவணங்கள்

8. மலேசியா நிறுவன முதலாளியின் சுயவிவரத்தின் நகல்

9. ஆதார் அட்டை, திருமணச் சான்றிதழ், வாடகை ஒப்பந்தங்கள்

இந்தியாவில் இருந்து மலேசியாவில் வேலை பெறுவது எப்படி?

மலேசியாவில் இந்தியர்களுக்கான அதிக தேவை உள்ள வேலைகள்.., எளிதாக பெறுவது எப்படி? | Jobs In Malaysia For Indians

1.மலேசியாவின் வேலை பற்றிய விவரங்கள்

நீங்கள் மலேசியாவில் வேலை தேடுவதற்கு முன்பாக , மலேசிய வேலைச் சந்தையைப் (Malaysia’s job market) புரிந்துகொள்வது அவசியம். உங்கள் திறமைகள், பணி அனுபவம், தகுதிகள் மற்றும் ஆர்வங்களுடன் ஒத்துப்போகும் தொழில்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், உங்கள் முன்னுரிமைகளின் அடிப்படையில் வேலைகளைத் தேடுவதைத் புரிந்துகொள்ள வேண்டும். கூடுதலாக, மலேசிய அரசாங்க வலைத்தளங்களை ஆராய்வது, தொழிலாளர் சட்டங்கள், தேவைப்படும் திறன்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

2.தொழில்முறை திறன்கள்

மலேசிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், மதிப்பீட்டுத் தேர்வுகள் மூலம் உங்கள் திறன்கள், முன்னேற்றத்திற்கான பகுதிகள் மற்றும் தொழில்முறை அனுபவத்தை மதிப்பிடுங்கள்.

LinkedIn போன்ற வலைத்தளங்கள், உங்கள் விண்ணப்பத்தை தொழில்துறை சார்ந்த திறமைகளுடன் மேம்படுத்த திறன் சார்ந்த சோதனைகளை வழங்குகின்றன.

3. Resume

உங்கள் விண்ணப்பத்தில் பெயர், பிறந்த தேதி, நாடு மற்றும் வசிக்கும் நகரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும்.

Indeed போன்ற பிரபலமான வலைத்தளங்களைப் பயன்படுத்தியோ அல்லது ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கும் கட்டண வலைதளங்களை பயன்படுத்தியோ நீங்கள் ATS-க்கு ஏற்ற விண்ணப்பங்களை (Resume) தயார் செய்யலாம்.

4. வலைத்தளங்கள் மூலம் இணையுங்கள்

தொழில் வல்லுநர்களுடன் இணைவது, வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும் உள்ளூர் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

LinkedIn போன்ற தளங்கள், காலியாக உள்ள பதவிகள் மற்றும் தேவைகள் பற்றிய நுண்ணறிவுகளுக்காக ஆட்சேர்ப்பு செய்பவர்கள் மற்றும் முதலாளிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகின்றன.

மலேசியாவில் இந்தியர்களுக்கான அதிக தேவை உள்ள வேலைகள்.., எளிதாக பெறுவது எப்படி? | Jobs In Malaysia For Indians

மலேசியாவில் ஏன் வேலைகளைத் தொடர வேண்டும்?

பல்வேறு வாய்ப்புகள்

மலேசியா பல்வேறு தொழில்களில் பரந்த அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இது இந்திய நிபுணர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது.

பொருளாதாரம்

மலேசியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நிலையான மற்றும் துடிப்பான பணிச்சூழலை வழங்குகிறது.

கலாச்சாரம்

மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகம் இந்தியர்களை வரவேற்கிறது. இதனால் எளிதில் அவர்களுக்கு ஏற்ப தங்களை அமைத்துக் கொள்கிறார்கள்.

உயர் வாழ்க்கை தரம்

மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியா குறைந்த செலவில் உயர் வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது.

அரசு ஆதரவு

மலேசிய அரசு வெளிநாட்டு திறமைகளை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விசா செயல்முறையை எளிதாக்குகிறது.

அமைவிடம்

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா, பிற முக்கிய ஆசிய பொருளாதாரங்களுக்கான நுழைவாயிலாகும்.

அதிக தேவை உள்ள தொழில்கள்

தொழில்நுட்பம் (IT Professionals)

மலேசியாவில் ஐடி நிபுணர்களுக்கான தேவை சமீபத்தில் அதிகரித்துள்ளது. மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்களுக்கு அதிக தேவை உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையை நவீனமயமாக்கவும், முன்னேற்றவும் ஏற்பட்ட உந்துதல் காரணமாக மலேசியாவில் ஐடி துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

மென்பொருள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வு, சைபர் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன.

பொறியியல் மற்றும் கட்டுமானம்

மலேசியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள் வளர்ந்து வருவதால் பொறியியல் மற்றும் கட்டுமானத்தில் திறமையான நிபுணர்களுக்கு குறிப்பிடத்தக்க தேவை உள்ளது.

திட்ட மேலாளர்கள், சிவில் இன்ஜினியர்கள் மற்றும் அளவு சர்வேயர்கள் ஆகிய பதவியில் இருப்பவர்களுக்கு தேவை உள்ளது. மலேசியா நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு இவர்கள் தேவையாக உள்ளனர்.

சுகாதாரம் (Healthcare)

மலேசியாவின் சுகாதாரத் துறை வேகமாக வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளில் ஒன்றாகும். இது ஒரு மருத்துவ சுற்றுலா தலமாகவும் மாற முயல்கிறது. இதனால் சுகாதாரத் துறையில் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இது மலேசியாவில் இந்திய சுகாதார நிபுணர்களுக்கான வேலைகளை மிகவும் பிரபலமாக்குகிறது.

மருத்துவப் பயிற்சியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

கல்வி (Education)

மலேசியாவில் கல்வித் துறையும் வளர்ச்சியடைந்து வருவதால் அதிகமான வெளிநாட்டுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி வசதிகள் உள்ளன. இந்திய கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அதிக தேவை உள்ளது.

நிதி சேவைகள் (Finance)

மலேசியாவில் நிதித்துறை வலுவானது. கணக்காளர்கள், நிதி மேலாளர்கள், நிதி ஆய்வாளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் உள்ளிட்ட நிதி நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

நிதி திட்டமிடல், முதலீட்டு மேலாண்மை மற்றும் இடர் மதிப்பீட்டில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்தத் துறை பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. இது இந்திய நிதி நிபுணர்களுக்கு லாபகரமாக மாற்றுகிறது.

இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்

மலேசியாவில் வேலை தேடும் இந்திய நிபுணர்களுக்கு, பல நம்பகமான தளங்கள் மற்றும் வளங்கள் உள்ளன

JobStreet Malaysia

மலேசியாவில் மிகவும் பிரபலமான வேலை இணையதளங்களில் ஒன்றான JobStreet Malaysia பல்வேறு தொழில்களில் பரந்த அளவிலான வேலைப் பட்டியல்களை வழங்குகிறது.

இது பயனர்கள் இருப்பிடம், தொழில் மற்றும் வேலை வகையின் அடிப்படையில் வேலை தேடல்களை அனுமதிக்கிறது.

Indeed Malaysia

நன்கு அறியப்பட்ட வேலை தேடுபொறியான Indeed , பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் வேலை பதிவுகளை ஒருங்கிணைக்கிறது. இது மலேசியாவில் வேலை தேடும் இந்திய நிபுணர்களுக்கு விரிவான தளமாக அமைகிறது.

Monster Malaysia

வேலை தேடுபவர்கள் தங்கள் திறமைகள் மற்றும் அனுபவத்துடன் பொருந்தக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் வகையில் Monster வேலைப் பட்டியல்களை வழங்குகிறது.

LinkedIn

ஆட்சேர்ப்பு செய்பவர்களுடன் இணையவும், தொழில் குழுக்களில் சேரவும், வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும் கூடிய ஒரு தொழில்முறை நெட்வொர்க்கிங் தளம் LinkedIn ஆகும்.

புதியவர்களுக்கான வேலை வாய்ப்புகள் (Freshers)

மலேசியாவில் புதிய இந்தியர்களுக்கு ஏராளமான தொடக்க நிலை வேலை வாய்ப்புகள் உள்ளன. ஐடி, வாடிக்கையாளர் சேவை மற்றும் சில்லறை விற்பனை போன்ற துறைகள் பெரும்பாலும் புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துகின்றன.

Customer Service Representative

வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளில் புதியவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கலாம். அங்கு அவர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க உதவுகிறார்கள். மலேசியாவில் கல்லூரிப் படிப்பை முடித்த இந்தியர்களுக்கு இது சிறந்த வேலைகளில் ஒன்றாகும்.

IT Support Specialist

மலேசியாவில் இந்தியர்களுக்கான வேலைகள் தொடக்க நிலை ஐடி ஆதரவு வேலைகளாகும். இதில் வேட்பாளரின் முக்கிய பொறுப்புகளில் தொழில்நுட்ப சிக்கல்களைக் கையாள்வது மற்றும் பயனர்களை ஆதரிப்பது ஆகியவை அடங்கும்.

Sales Executive

புதிய பட்டதாரிகள் விற்பனைத் துறையில் தொழில்களைத் தொடரலாம். தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தவும் விற்கவும் பணிபுரியலாம்.

Junior Software Developer

கணினி அறிவியல் அல்லது மென்பொருள் பொறியியல் பின்னணியைக் கொண்ட புதியவர்கள், ஜூனியர் டெவலப்பர்களாக பணிபுரியலாம்.

Marketing Assistant

சந்தைப்படுத்துதலில் பிரச்சாரங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆதரிப்பது போன்ற வேலைகள் மலேசியாவில் உள்ளன.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US