இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்!

Sri Lanka Job Opportunity
By Thiru May 08, 2025 11:37 AM GMT
Report

வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் இந்திய நிபுணர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு துறைகளில் திறமையான இந்திய பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சிறந்த பணிச்சூழல் காரணமாக, பல இந்தியர்கள் இலங்கையில் பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர்.

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்! | Jobs In Sri Lanka For Indians

இந்த கட்டுரை, இலங்கையில் உள்ள முக்கிய வேலைவாய்ப்பு துறைகள், விசா விண்ணப்ப செயல்முறை மற்றும் வேலை தேடும் முறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது.

இலங்கையில் உள்ள முக்கிய வேலைவாய்ப்பு துறைகள்

தகவல் தொழில்நுட்பம் (IT வேலைகள்)

டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வருவதால், மென்பொருள் மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு மற்றும் நெட்வொர்க் பொறியியல் போன்ற துறைகளில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக தேவை உள்ளது.

HCLTech மற்றும் Virtusa போன்ற முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் செயல்பட்டு வருகின்றன மற்றும் இந்திய IT நிபுணர்களை தொடர்ந்து பணியமர்த்துகின்றன.

நிதி மற்றும் வங்கி வேலைகள்

இலங்கையின் நிதி மற்றும் வங்கித் துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

சொந்த போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய ரஷ்யா: உக்ரைன் முன் வைக்கும் பகீர் குற்றச்சாட்டு!

சொந்த போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய ரஷ்யா: உக்ரைன் முன் வைக்கும் பகீர் குற்றச்சாட்டு!

இங்கு கணக்காளர்கள், நிதி ஆய்வாளர்கள், வங்கி உதவியாளர்கள் மற்றும் காப்பீட்டு நிபுணர்கள் போன்றோருக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்! | Jobs In Sri Lanka For Indians

உற்பத்தித் துறை வேலைகள்

இலங்கையின் உற்பத்தி துறை, குறிப்பாக ஆடை மற்றும் ஜவுளித் துறை, வேகமாக வளர்ந்து வருகிறது.

இதனால், இயந்திரவியல் பொறியாளர்கள், மின்சார பொறியாளர்கள், சிவில் பொறியாளர்கள், உற்பத்தி மேலாளர்கள், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.

விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா வேலைகள்

ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இலங்கை இருப்பதால், ஹோட்டல் மேலாண்மை, உணவு மற்றும் பான சேவைகள் மற்றும் சுற்றுலா செயல்பாடுகள் போன்ற துறைகளில் திறமையான பணியாளர்கள் தொடர்ந்து தேவைப்படுகிறார்கள்.

சுகாதாரத்துறை வேலைகள்

இலங்கையின் சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் சுகாதார நிர்வாகிகள் ஆகியோருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.

கல்வித் துறை வேலைகள்

பல்வேறு கல்வி நிலைகளில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான காலியிடங்கள் இலங்கையில் உள்ளன.

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வேலைகள்

வணிகங்களின் விரிவாக்கத்தால், சிறந்த தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் திறன்களைக் கொண்ட சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிபுணர்களுக்கு அதிக தேவை உள்ளது.

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்! | Jobs In Sri Lanka For Indians

பொறியியல் வேலைகள்

உற்பத்தித் துறையைத் தவிர, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காக சிவில் இன்ஜினியர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.

இந்திய குடிமக்களுக்கான வேலை விசா தேவைகள்

இலங்கையில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய விரும்பும் இந்திய குடிமக்கள் கட்டாயம் வேலை விசா பெற வேண்டும். இதற்கான செயல்முறை பின்வருமாறு:

வேலை வாய்ப்பை பெறுதல்

இலங்கையில் முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு கடிதத்தைப் பெறுவது முதல் படி.  உங்கள் சார்பாக விசா விண்ணப்ப செயல்முறையை உங்கள் முதலாளி தான் பொதுவாகத் தொடங்குவார்.

நுழைவு விசா ஒப்புதல் பெறுதல்

உங்கள் முதலாளி, கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து உங்களுக்கு நுழைவு விசா ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவு விசா முத்திரை பெறுதல்

ஒப்புதல் கிடைத்தவுடன், உங்கள் பாஸ்போர்ட்டில் நுழைவு விசா முத்திரையைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அருகிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அல்லது தூதரகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்! | Jobs In Sri Lanka For Indians

சரியாக பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட விசா விண்ணப்ப படிவம்.

குறைந்தது ஆறு மாத காலாவதி கொண்ட அசல் பாஸ்போர்ட்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

உங்கள் தேசிய அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல்.

உறுதி செய்யப்பட்ட ஒரு வழி விமான டிக்கெட்.

இலங்கை முதலாளியிடமிருந்து பெறப்பட்ட அசல் வேலை வாய்ப்பு கடிதம், அதில் வேலைவாய்ப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

முதலாளியின் வணிகப் பதிவு ஆவணங்கள்.

பொருத்தமான அமைச்சகம் அல்லது முதலீட்டுச் சபையிலிருந்து (BOI) பெறப்பட்ட பரிந்துரை கடிதம் (பொருந்தினால்).

 உங்களது கல்வி மற்றும் தொழில்முறை சான்றிதழ்கள்.

பொலிஸ் அனுமதி சான்றிதழ் (PCC).

மருத்துவ சான்றிதழ்.

இலங்கையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள்: அதிக சம்பளம், விசா பெறுவதற்கான வழிமுறைகள்! | Jobs In Sri Lanka For Indians

இலங்கையில் விசா ஒப்புதல் முத்திரை பெறுதல்

இலங்கைக்கு வந்தவுடன், உங்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்பட்ட நுழைவு விசா காலாவதியாகும் முன், கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து உங்கள் பாஸ்போர்ட்டில் முழு வேலைவாய்ப்பு விசா முத்திரையைப் பெற உங்கள் முதலாளி உங்களுக்கு உதவுவார்.

குடியிருப்பு விசா பெறுதல்

நீண்ட காலம் இலங்கையில் பணிபுரிய விரும்பினால், நீங்கள் இலங்கைக்கு வந்த பிறகு குடியிருப்பு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். இந்த விசா பொதுவாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் புதுப்பிக்கத்தக்கது.

முக்கிய குறிப்புகள்

நீங்கள் வேலை செய்ய விரும்பினால் சுற்றுலா விசா அல்லது வணிக விசாவில் இலங்கை வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இலங்கைக்கு வந்த பிறகு விசா வகையை மாற்றுவது பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை.

பெரும்பாலான ஆரம்ப விசா விண்ணப்ப நடைமுறைகளின் பொறுப்பை உங்கள் முதலாளி தான் மேற்கொள்வார்.

உங்கள் விசா நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க அனைத்து ஆவணங்களும் உண்மையானவை மற்றும் சரியானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விசா செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நீங்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படலாம்.

வேலை வாய்ப்புகளை கண்டறிவது எப்படி?

இலங்கையில் உள்ள வேலை காலியிடங்களை கண்டறிய உதவும் சில பிரபலமான ஆன்லைன் தளங்கள்:

topjobs.lk,  ikmanJOBS,  jobfactory.lk,  shine.com,  linkedin.com,  மேலும், HCLTech மற்றும் Virtusa போன்ற இலங்கையில் செயல்படும் பெரிய நிறுவனங்களின் கலைஞர் பக்கங்களையும் (Career Pages) நீங்கள் நேரடியாகப் பார்வையிடலாம். Emerald Isle Manpower போன்ற ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களும் இலங்கையில் வேலை தேடுபவர்களை வேலை வாய்ப்புகளுடன் இணைக்க உதவுகின்றன.

இலங்கையின் வேலை சந்தை மற்றும் விசா விண்ணப்ப செயல்முறை ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதன் மூலம், இந்திய நிபுணர்கள் இலங்கையில் உள்ள நம்பிக்கைக்குரிய தொழில் வாய்ப்புகளை வெற்றிகரமாக ஆராய்ந்து அடைய முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US