முடிசூட்டிக் கொண்ட பிரித்தானிய மன்னருக்கு வாழ்த்துக்கள்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ட்வீட்
பிரித்தானிய மன்னராக முடி சூட்டிக் கொண்ட மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முடிசூட்டிக் கொண்ட மன்னர் சார்லஸ்
பிரித்தானியாவின் 40வது மன்னராக மூன்றாம் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அபே மடாலயத்தில் முடிசூட்டிக் கொண்டார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் தலையில் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி செயின்ட் எட்வர்ட் மகுடத்தை வைத்து ஆசீர்வதித்தார்.
SkyNews
கடந்த செப்டம்பரில் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இந்த பொறுப்பிற்கு வந்துள்ளார்.
மன்னர் சார்லஸை வாழ்த்திய அமெரிக்க ஜனாதிபதி
மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொள்ளாத நிலையில், ட்விட்டரில் மன்னர் சார்லஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “முடிசூட்டிக் கொண்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவருக்கும் வாழ்த்துக்கள். அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கு இடையிலான நீடித்த நட்புறவு நம்முடைய இரண்டு நாட்டு மக்களின் பலமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to King Charles III and Queen Camilla on their Coronation. The enduring friendship between the U.S. and the U.K. is a source of strength for both our peoples.
— President Biden (@POTUS) May 6, 2023
I am proud the First Lady is representing the United States for this historic occasion.
அத்துடன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், அமெரிக்க முதல் பெண்மணி அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமையடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.